அந்த படத்தை எடுக்க ஆரம்பிச்சு ஒரே தலைவலியா போயிடுச்சு.. புலம்பும் வி இயக்குநர்
சென்னை: ஹாலிவுட் படங்களை தமிழில் காப்பியடித்து புதிய படம் என்று ஏமாற்றி விற்பனை செய்து வந்த அந்த வி இயக்குநரின் சமீபத்திய படங்கள் படு தோல்வியை சந்தித்து வந்தன.
இந்நிலையில், பழைய விரோதத்துக்கு பழி வாங்க அந்த இயக்குநர் பெண் லீடர் படத்தை இயக்கி வருகிறார்.
புத்தகம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டு வரும் அந்த படத்தில், உண்மைக்கு புறம்பான பல காட்சிகளை கமர்ஷியலுக்காக புகுத்தி வேற்று மொழி கதாசிரியர்கள் புதிய கதை ஒன்றை எழுதி வருகிறார்களாம் இதனால், அந்த இயக்குநருக்கே அது தலைவலியாக மாறியுள்ளது.

ஆரம்பமே மொக்கை
வடமாநில நடிகையை வைத்து வேற லெவலில் படத்தை பண்ணுகிறேன் என அந்த வி இயக்குநர் ஆரம்பித்த அந்த படத்தின் முதல் பார்வை ரசிகர்கள், விமர்சகர்கள் என பலராலும் கழுவி ஊற்றப்பட்டு ஆரம்பமே படு மொக்கை வாங்கியுள்ளது.

இங்கிலீஷ் இயக்குநர் வைத்த செக்
சமீபத்தில் அந்த இங்கிலீஷ் இயக்குநர் அதே லீடரை வைத்து எடுத்த சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என பலரது பாராட்டுக்களை பெற்று ஓடி வருகிற நிலையில், அங்க பார்த்துட்டு அப்படியே இந்த இயக்குநர் பக்கம் கேமராக்களை ரசிகர்கள் திருப்ப, என்ன சொல்வதென்றே தெரியாமல் அந்த வி இயக்குநர் திணறி வருகிறார்.

எல்லாமே ஃபேக்
இதில், இன்னொரு புதுக்கதையை வடமாநில கதாசிரியர்கள் கமர்ஷியல் என்ற பேரில் இஷ்டத்துக்கு எழுதி இருக்கும் கொஞ்ச நஞ்ச பேரையும் கெடுத்து வைத்து வருகின்றனராம். இதனால், அந்த இயக்குநர் பயங்கர தலைவலியில் இருக்கிறாராம்.

அவங்கதான் காரணமாம்
ஏற்கனவே அந்த நடிகை நடித்த சுதந்திர போராட்ட வீரங்கனை படம் டைரக்டர் யார் என்ற மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது. தெலுங்கு இயக்குநர் இயக்கிய படத்தை தான் தான் இயக்கினேன் என பொய் தண்டோரா போட்டு, அசிங்கப்பட்டார். இந்நிலையில், இந்த படத்திலும் தனது இஷ்டத்துக்கு தனக்கு ஏற்றார்போல கதையை மாற்ற சொல்லி வருகிறாராம். இதனால், படத்தின் அவுட்புட் அந்த வி இயக்குநர் நினைத்தது போல வராமல், எங்கெங்கோ டிராவல் ஆகி வருகிறதாம். படம் வெளி வரும் போது, அந்த வி இயக்குநரின் பெயராவது படத்தில் இடம்பெறுகிறதா இல்லையா என்கிற வேடிக்கையை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வாரிசு டார்ச்சர்
ஏற்கனவே பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வரும் அந்த வி இயக்குநருக்கு, தான் தான் அந்த லீடருக்கு வாரிசு என அடிக்கடி தம்பட்டம் அடித்து வரும் அந்த பாப்பாம்மா தொல்லையும் சேர்ந்து பயங்கர டார்ச்சர் செய்து வருகிறதாம். எப்படித் தான் படத்தை எடுத்து வெளியிட போகிறேனோ தெரியவில்லை என்றும் தேவையில்லாமல், இந்த தலைவலியில் சிக்கித் தவிக்கிறேன் என்றும் அந்த வி இயக்குநர் புலம்பி வருகிறார் என கோலிவுட்டில் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











