»   »  வைட் ஷாட்லாம் டூப் வெச்சு எடுத்துக்குங்க... வம்புவின் அலப்பறையால் தவிக்கும் இளம் இயக்குனர்!

வைட் ஷாட்லாம் டூப் வெச்சு எடுத்துக்குங்க... வம்புவின் அலப்பறையால் தவிக்கும் இளம் இயக்குனர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தள்ளிப் போகாதே... என்று இயக்குனரே வெளியில் பிரஸ்சை அழைத்து தம்பியின் மானத்தை கப்பலில் ஏற்றிவிட்டார். ஆனாலும் தம்பி திருந்தியபாடு இல்லையே...!

புத்த இயக்குனருக்கு கால்ஷீட் சொதப்புவதற்கு காரணம் இயக்குநர் தன் பரம எதிரியான ஒல்லி நடிகருடன் நட்பு பாராட்டுவதுதானாம்... இருவரும் இணைகிறார்கள் என்று கேள்விபட்ட உடனேயே தம்பிக்கு மேலும் கீழும் பற்றி எரிந்திருக்கிறது. ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

Vambu actors atrocity in shooting

ஒல்லி ஹீரோவுக்கான கதையை பேச்சுவாக்கில் உளறிக்கொட்டி இருக்கிறார் இயக்குநர். அன்று பிடித்தது அவருக்கு சனி. அவனுக்கு இப்படி ஒரு ஆக்‌ஷன் கதை...இதை நான் பண்ணியிருப்பேனே... என்ற கோபம்தான் தம்பியை படத்தோடு ஒன்ற விடாமல் தடுக்கிறது.

தம்பி இப்போது அந்த இளம் சர்ச்சை இயக்குநரின் படத்தில் நடிக்கிறார் அல்லவா? அதிலும் சிக்கல் தருகிறாராம். "மாஸ்டர் ஷாட், க்ளோஸ் அப் ஆகிய முகம் தெளிவாக தெரியும் காட்சிகளை மட்டும் என்னை வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வைடு ஷாட் எல்லாம் எனக்கு டூப் வெச்சு எடுத்துக்கொள்ளுங்கள்,'' என்று சொல்லிவிட்டாராம்.

இதெல்லாம் நடக்கற காரியமா? என கரும்பு மெஷினில் காலை விட்டதுபோல் முழிக்கிறாராம் இயக்குநர். வைடு ஷாட்ல கிஸ் ஸீன் வெச்சாலும் இப்படிதான் பண்ணுவாரா தம்பி?

English summary
Young actor known for controversies is now torturing his next movie director due to the later's commitment with his rival actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil