»   »  வந்தனாவின் ஒரு படக் காதல்

வந்தனாவின் ஒரு படக் காதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரொம்ப நாளாக தயாரிப்பில் இருந்து வரும் அஜந்தா படத்தின் நாயகி வந்தனா, நடிச்சு மூனு இலை விடும்முன்பே காதலில் பழமாக இருக்கிறாராம்.

தெலுங்கு நாயகன் ரமணாவுக்கு ஜோடியாக அஜந்தா படத்தில் நடித்து வருகிறார் நந்தனா. படத்தின் பெயரையேநாயகிக்கும் இப்படத்தில் பெயராக வைத்து விட்டாராம் இயக்குநர். இதனால் அவரது பெயர் அஜந்தாஆகிவிட்டது.

பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக அசத்தலான பாடல்களைப் போட்டுக்கொடுத்துள்ளார் இசைஞானி இளையராஜா.

படத்தில் காதலர்களாக பழகும் ரமணாவும், வந்தனாவும் நிஜமாலுமே காதலிக்க ஆரம்பித்து விட்டார்களாம்.கேமரா முன்பு காதல் வசனங்களைப் பேசும் இருவரும், படப்பிடிப்பு முடிந்த பின்னர் ராத்திரி நேரத்தில்தனிமையில் சந்தித்து காதலை இனிமையாக வளர்த்து வருகிறார்களாம்.

வட பழனியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இவர்களை அடிக்கடி (அதாவது தினந்தோறும்!) பார்க்கமுடியுமாம். இரவு நேரத்தில் பார்ட்டிகளுக்கு வந்து கலந்து கொண்டு அப்படியே எதிர்காலத்தைப் பற்றி எக்குத்தப்பாக அலசி ஆராய்ந்து வருகிறார்களாம்.

தங்களைப் பற்றி பலரும் பேச ஆரம்பித்து விட்டனர் என்று தெரிந்தபோதும் கூட அதைகண்டுகொள்வதில்லையாம் இருவரும். இந்தக் காதல் கல்யாணத்தில் முடியுமா அல்லது ஒரு படக் காதல்வரிசையில் சேருமா என்பதுதான் அஜந்தா யூனிட்டாரின் ஒரே கேள்வி.

Read more about: vandana and ramana in love

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil