10 வருஷமா குழந்தை இல்லை.. நிம்மதியே இல்லாத வீடு.. விவாகரத்து முடிவில் வாரிசு நடிகர்!
சென்னை: தமிழ் சினிமாவில் 90கால கட்டத்தில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து, கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் அந்த கண்ணாடி இயக்குனர். தன்னைப்போலவே தன்னுடைய மகனையும் சினிமாவில் பெரிய இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என ஆசைப்பட்ட கண்ணாடி இயக்குநர், சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தனது மகனை நடிக்க வைத்தார். பின் ஹீரோவாக்கி அழுகு பார்த்தார்.
ஆனால், இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், இவர் பெயர் சொல்லும் அளவிற்கு எந்த திரைப்படமும் வெற்றிபெறவில்லை. கண்ணாடி இயக்குனர் பல நடிகர்கள் நடிகைகளை அறிமுகமாகி, அவர்கள் அனைவரும் புகழின் உச்சத்தில் இருக்கும் போது, தன்னுடைய வாரிசுக்கு ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற மன வருத்தம் அவரின் மனதில் எப்போதுமே உண்டு. இருந்த போதும், வாரிசு நடிகர் கிடைத்த பாத்திரங்களில் நடித்து வருகிறார். அழகும் திறமையும் இருப்பதால், தனக்கான ஒரு அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

10 வருஷமாச்சு குழந்தை இல்ல: இந்த காலகட்டத்தில், டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஒருவரை சந்தித்து பேசி உள்ளார். அது நட்பாகி காதலாக மாறியிருக்கிறது. அதன் பின் இருவரும் திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் கணவன் மனைவியாக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தையே இல்லை. இதனால், மனவேதவை இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், குழந்தை பற்றி கேட்பவர்களுக்கு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சரியான பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
வேதனையில் நடிகை: இப்படி, குழந்தை பற்றி அடுத்தடுத்து வருவது கேள்விகளால் மனைவிக்கும் வாரிசு ஹீரோவிற்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. உன்னால் என் வாழ்க்கையே போச்சு என ஒப்பாரி வைத்து இருக்கிறார் நடிகை. குழந்தை இல்லாததால், அது தொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருப்பதால், இருவரும் வீட்டிலேயே இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதே இல்லையாம். ஆனால் நடிகைகோ, எப்படியாவது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக இருவரும் சிகிச்சையும் செய்து இருக்கிறார்கள். ஆனால், அது பலன் அளிக்கவில்லை என்பதால், வாரிசு நடிகர் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என்ற யோசனையை சொல்லி இருக்கிறார். இதில், நடிகைக்கு உடன்பாடு இல்லாததால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இப்படி தினம் தினம் வரும் சண்டையால், இதற்கு மேல் சேர்ந்து இருக்க முடியாது, இருவரும் பிரிந்துவிடலாம் என இருவரும் முடிவு செய்து இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











