8 வயதில் மகள்.. அம்மாவை வளைத்துப்போட்ட வாரிசு நடிகர்.. எல்லாத்துக்கும் காரணம் அதுதானாம்!
சென்னை: பிரபல வில்லன் நடிகரின் வாரிசுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ஆனால், அந்த வாரிசு நடிகர் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான இவர், வில்லன்,குணசித்திரம் என பலவிதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தன்னுடன் இணைந்து நடித்த ஒரு நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நடிகையின் குடும்பமும் ஒரு சினிமா குடும்பம் தான். இருவரும் வேறு வேறு மதமாக இருந்த போதும், இதுவரை எந்தவிதமான கருத்துவேறுபாடும் வராமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

வில்லன் நடிகர்: தன்னைப்போலவே தனது மகனும் சினிமாவில் பிரகாசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த வில்லன் நடிகர் தனது மகனுக்காக வாய்ப்பு தேடி அலைந்தார். ஆனால், சரியாக வாய்ப்பு வரவில்லை. இதையடுத்து,பேசிய நடிகர் ஒருவரின் சிபாரிசின் பேரில் சின்னத்திரை நிகழ்ச்சிக்கு போனார். அங்கே அவரால் தாக்குபிடிக்க முடியாமல் திரும்பினார். அதன்பின், ஒரு சில படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் அளவிற்கு தான் வாரிசு நடிகருக்கு வாய்ப்பு வந்தது,
திடீர் திருமணம்: இந்த நேரத்தில் தான் வாரிசு நடிகருக்கு திடீரென திரையுலகமே மெச்சும் அளவிற்கு மெஹந்தி, ஹல்தி, கல்யாணம், ரிசப்ஷன் என சகலத்துடன் கல்யாணம் படுஜோராக நடந்தது. அப்போதே இது காதல் திருமணம் என்று சொல்லப்பட்டது, இவர்களின் திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
8 வயதில் மகள்: இவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதமானநிலையில் அந்த வாரிசு நடிகர் சேனல் சேனலாக சென்று தனது காதல் கதை குறித்து பேசி வருகிறார். அதாவது, தனது மனைவியை நான் முதன் முதலில் ஜிம்மில் சந்தித்தேன் பார்த்ததுமே காதல் வந்துவிட்டது. கட்டுனா இவர்களைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று முடிவு செய்துவிட்டதாகவும். அதற்காக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு காதலை சொல்லி ஒகே வாங்கிவிட்டதாகவும் பேசி இருந்தார். அந்த பேட்டியில் இவர்களின் காதல் விஷயம் மட்டும் வெளியே வரவில்லை, வாரிசு நடிகர் திருமணம் செய்து கொண்ட அந்த பெண்ணுக்கு 8 வயதில் மகள் இருக்கிறாள், அதுவும் இல்லாமல் வாரிசு நடிகரை விட, அவருக்கு வயதும் அதிகமாம். இருவரும் நெருங்கி பழகி தனியாக குடித்தனம் நடத்தி இருக்கின்றனர். இதுவாரிசு நடிகரின் வீட்டுக்கு தெரிந்து பஞ்சாயத்து ஆன பிறகு தான், பூசி முழுகி வேறு வழியே இல்லாமல் திருமணம் நடந்துள்ளது.
கடுப்பில் வில்லன் நடிகர்: 8 வயதில் மகள் இருக்கிறாள், வயதில் பெரியவள் என எந்த விஷயத்தையும் வெளியில் தெரியாமல் குறிப்பாக மீடியாவிற்கு தெரியாமல் மூடி மறைத்து காதல் திருமணம் என்பது போல பாவனை காட்டி திருமணத்தை நடத்தினார் அந்த வில்லன் நடிகர். ஆனால், இப்போது வாரிசு நடிகரோ தனது புது மனைவியுடன் சேனல் சேனலாக சென்று பேட்டி கொடுத்து குடும்ப மானத்தை வாங்கி வருகிறார். இதனால்,வில்லன் நடிகர் கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், வாரிசு நடிகர் இப்படி பேட்டி கொடுத்தாலாவது தனக்கு எதாவது வாய்ப்பு வராதா என்று எதிர்பார்க்கிறார் போல.


Click it and Unblock the Notifications











