வாரிசு நடிகரின் காதல் லீலைகள்.. தாலி கட்டி தனி குடித்தனம்.. பின் கழட்டி விடப்பட்ட நடிகை!
சென்னை: தமிழ் சினிமா என்றாலே இவர் பெயர் இல்லாமல் இருக்காது. எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும், அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்து பெயர் எடுத்துவிடுவார். ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த இவர், அடுத்தடுத்து பல திரைப்படத்தில் நடித்து ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்து வைத்து இருக்கிறார். இவருக்கு சொத்தைவிட குடும்ப மானமும், ஒழுக்கமும் தான் முக்கியம் என்பதால், எந்த நடிகையுடனும் வரம்பு மீறி பேசமாட்டார். ஆனால், இவரின் வாரிசோ, தன்னுடன் சேர்ந்து நடித்த அனைத்து நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கி அப்பாவின் பெயரை கெடுத்தார்.
80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அந்த நடிகர் அறிமுகமான திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இவர் தனது அப்பாவை போல படப்பிடிப்பு தளத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என இல்லாமல், தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் வரம்புமீறி பேசுவார். இதனால், அந்த வாரிசு நடிகர் எந்த நடிகையுடன் சேர்ந்து நடித்தாலும் அந்த நடிகையுடன் காதல் என்று கிசுகிசு வந்துவிடும்.

கவர்ச்சி நடிகையுடன் காதல்: வாரிசு நடிகர் பட்டுப்போல உடல்வாகு கொண்ட கவர்ச்சி நடிகையுடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தார். அந்த நடிகையுடன் சேர்ந்து பழக ஆரம்பித்து, அந்த கவர்ச்சி நடிகையின் மனதில் ஆசையை விதைத்துள்ளார். இந்த விவகாரம் வாரிசு நடிகரின் அப்பாவிற்கு தெரியவர, அவர் மகனை அழைத்து கண்டித்துள்ளார். மேலும், அப்படியே விட்டால் சரிபட்டு வராது என முடிவு செய்து, ஒரு பெண் பார்த்து திருமணமும் செய்து வைத்தார்.
மீண்டும் காதல்: ஆனால், திருமணத்திற்கு பிறகும், வாரிசு நடிகர், முன்பை போலவே தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் ஊர் சுற்றிவந்தார். இந்த நேரத்தில் தான் வடமாநிலத்தில் இருந்து கொழுக் மொழுக் நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். கொழுக் மொழுக் நடிகையும் வாரிசு நடிகையும் சேர்ந்து நடித்த திரைப்படம் ஒன்று மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் இவர்களின் ஜோடி பொருத்தம் சூப்பராக இருந்ததால், இருவரும் சேர்ந்து பல திரைப்படத்தில் நடித்தனர்.
ரகசிய திருமணம்: இப்படி இருவரும் பல படத்தில் நடித்ததால் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். அதன்பின், சினிமா வட்டாரத்தில் யாருக்கும் தெரியாமல், இருவரும் கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தினர். இந்த விஷயம் வாரிசு நடிகரின் அப்பாவிற்கு தெரியவர, இப்படியே விட்டால் குடும்பமானம் போய்விடுமே என்று, கொழுக் மொழுக் நடிகையின் வீட்டுக்கு வந்து, தமிழ்நாட்டுக்கு பொழப்பை தேடி வந்தா, அந்த வேலையை மட்டும் பாரு, என் குடும்பம் சாதாரணமான குடும்பம் இல்லை என்று மிரட்டியது மட்டுமில்லாமல், அந்த வீட்டில் இருந்த பொருட்களையும் தூக்கி போட்டு உடைத்து மிரட்டிஉள்ளார்.
சொத்தில் பங்குஇல்லை: இந்த விஷயத்தை கேள்விப்பட்ட வாரிசு நடிகர், அப்பாவிடம் சண்டைக்கு போக, ஒழுங்கா ஒழுக்கமா இரு, இல்லை என்றால், சொத்தில் ஒரு பைசாக்கூட கிடைக்காது, படத்தில் நடிக்கவிடாதபடி செய்துவிடுவேன் என்று மிரட்ட, வாரிசு நடிகர் வேறுவழியே இல்லாமல் அந்த நடிகையை பிரிந்து விட்டார். அதன் பிறகு, அந்த கொழுக் மொழுக் நடிகை, மனஉளைச்சலில் இருந்ததால், படத்தில் நடிக்காமல் இருந்தார். அதன்பிறகு அதில் இருந்து மீண்டு, சில ஆண்டுகள் கழித்து இயக்குநர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











