வாரிசு நடிகையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த வாரிசு நடிகர்?.. வீட்டுக்கு மேலே வாடகைக்கு வைத்த சம்பவம்
சென்னை: வாரிசு நடிகை தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று அவரை வாரிசு நடிகர் தன்னுடைய அருகிலேயே இருக்கும் நண்பர் வீட்டில் வாடகைக்கு வைத்திருந்தாராம்.
கோலிவுட்டில் அனைவராலும் கவனிக்கப்படும் நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் வாரிசு நடிகர். அவரது படங்கள் சமீபகாலமாக சரியாக போகவில்லை. இருந்தாலும் வெற்றியை எப்படியாவது ஈட்டிவிட வேண்டும் என்ற முழு முனைப்பில் இப்போது ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றி அவருக்கு பல விதங்களில் உதவும் என்பதால் அதை எப்படியாவது எட்டிப்பிடித்துவிட திட்டம் தீட்டியிருக்கிறார்.

வாரிசு நடிகை: அந்த வாரிசு நடிகருக்கு வாரிசு நடிகை மீது கடந்த சில காலமாகவே கண் இருந்திருக்கிறது. கடவுள் பெயர் தாங்கிய படத்தில் இரண்டு பேரும் சேர்ந்து நடித்தபோது கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம். அதனையடுத்து அரசாங்க படத்திலும் இரண்டு பேர் சேர்ந்து நடித்தபோது அந்த கெமிஸ்ட்ரி அடுத்தக்கட்டத்துக்கு சென்றதாக அப்போதே கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.
காதலில் அவர்கள்?: அடுத்தக்கட்டம் என்பது காதல்தானாம். ஆனால் ஊரறிய தங்களது காதலை தண்டோரா போட்டு சொல்ல முடியாத அவல நிலை இருவருக்கும். ஏனென்றால் சிங்க வாரிசு நடிகர் ஏற்கனவே திருமணமானவர். இருந்தாலும் வாரிசு நடிகையை பிரிய முடியாத நடிகர் அவ்வப்போது அக்கட தேசம் சென்றும்; சென்னையிலும் சந்தித்திருக்கிறாராம். ஆனால் வரிசையாக படங்களில் கமிட்டாகிவிட்டதால் இரண்டு பேரும் சந்தித்துக்கொள்ள முடியாமல் திணறினார்களாம்.
கட்டுப்பாட்டில் எடுத்த வாரிசு நடிகர்?: இதனால் என்ன செய்வதென்று யோசித்த நடிகருக்கும் ஒரு பொறி தட்டியிருக்கிறது. அதாவது கரையில் இருக்கும் தனது வீட்டுக்கு அருகிலேயே தன்னுடைய நண்பர் வீடும் இருக்கிறது. அந்த நண்பர் நடிகர்தான். உடனடியாக முடிவெடுத்த வாரிசு நடிகர் அந்த நடிகையை நாடக நடிகர் வீட்டுக்கு மேலே இருக்கும் காலி போர்ஷனில் வாடகைக்கு வைத்துவிட்டாராம்.
சண்டை போட்ட மனைவி: ஆரம்பத்தில் இது சாதாரணமானதுதான் என நினைத்த வாரிசு நடிகரின் மனைவிக்கு விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவர நடிகருடன் சண்டை போட்டுக்கொண்டு வெளிநாடு பறந்துவிட்டாராம். அதுமட்டுமின்றி அரசாங்க பட விழாவுக்குக்கூட அதனால்தான் அவர் வரவில்லையாம். நிலைமை இப்படி இருக்க இரண்டு வாரிசுகளும் தாயோடு பறந்திருக்கின்றனர்.
கழற்றிவிட்ட வாரிசு நடிகர்?: முழுதாக வாரிசு நடிகையை கட்டுப்பாட்டில் எடுத்த நடிகர் அடிக்கடி நண்பர் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்திருக்கிறார் இப்படிப்பட்ட சூழலில்தான் காப்பி படத்தில் கமிட்டானார். அந்த படத்தின் இயக்குநரோ ஹீரோயினாக இவரை ஃபிக்ஸ் செய்யலாம் என ஒருவரை கூற வாரிசு நடிகருக்குள் இருந்த பழைய தீ மீண்டும் பற்றிக்கொண்டதாம்.
அதனையடுத்து பனி, வெயில் என்று பாராமல் விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து படம் வளர; அப்படியே இவர்களும் தங்களது பழைய தீயை வளர்த்திருக்கிறார்கள். ஷூட்டிங் முடிந்தால் இந்தத் தீ அணைந்துவிடும் என்று எதிர்பார்த்தால் ஷூட்டிங் முடிந்தபிறகும் இந்தத் தீயை அணையவிடாமல் இருவரும் பார்த்துக்கொண்டார்கள். அந்தத் தீயால் வாரிசு நடிகை ரொம்ப சூடுபட்டு வீட்டை காலி செய்துவிட்டு தன்னுடைய தேசத்துக்கே மீண்டும் சென்றுவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











