ஒல்லி இசையமைப்பாளருடன் காதல்.. ஸ்டார் நடிகரை கழட்டி விட்ட நடிகை.. தொழிலதிபருடன் ரகசியமாக திருமணம்!
சென்னை: ஸ்டார் நடிகரை காதலித்து அவருடன் ஊர் ஊராக சுற்றி வந்த வாரிசு நடிகை தற்போது, அவரை கழட்டி விட்டுவிட்டு, தொழில் அதிபர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் குறித்து செய்திகள் வெளியாகி வருகிறது.
வாரிசு நடிகையின் மகளான இவர் சிறுவயதில் இருந்தே பலத்திரைப்படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து,பருவ வயதை அடைந்த அந்த நடிகை தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். ஆனால், முதல் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாத போதும், நடிகை பார்ப்பதற்கு அம்சமாக இருந்ததால், அடுத்து ஒல்லி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஒல்லி இசையமைப்பாளருடன் காதல்: அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமால் நம்பர் ஒன் நடிகையாக மாறினார். இந்த நடிகைக்கு அழகு மட்டுமில்லை, நடிப்பு திறமையும் இருந்ததால் இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது. இதையடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஜொலித்து வந்த இவர் ஒல்லி இசையமைப்பாளருடன் சேர்த்து சுற்றியதால், அவரை காதலிப்பதாக சோஷியல் மீடியாவில் செய்தி வெளியானது. ஆனால், வாரிசு நடிகை அப்பா, அது பொய் என்று தானாக முன் வந்து அந்த செய்தி மறுத்தார்.
ஸ்டார் நடிகருடன் ரிலேஷன்ஷிப்: அதன் பின், ஸ்டார் நடிகருடன் சேர்ந்து நடித்த போது அவருடன் நெருக்கம் ஏற்பட்டு, அந்த நட்பு வீடு வரை சென்று, அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். வாரிசு நடிகையின் கார் அந்த நடிகரின் வீட்டில் பல நாட்கள் நின்றிருந்த செய்தி மீடியாவில் காட்டுத்தீ போல பரவியது. ஸ்டார் நடிகருக்கு ஏற்கனவே ஒரு நம்பர் நடிகையுடன் கனெக்ஷன் இருப்பதாக செய்திகள் பரவி வரும். இலவச இணைப்பு போல இந்த செய்தியும் பரவியதால், ஸ்டார் நடிகர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த செய்தி மேலும் பரவாமல் ஆப் செய்தார்.
ரகசிய திருமணம்: இதையடுத்து, வாரிசு நடிகை குறித்த செய்திகள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது, காதும் காதும் வைத்தது போல தொழிலதிபருடன் திருமணம் என்று செய்தி பரவி வருகிறது. அந்த தொழிலதிபருடன் 15 ஆண்டு காதல் என்றும், அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவருக்காக மதம் மாற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. எது எப்படியோ அந்த வாரிசு நடிகைக்கு கல்யாணம் ஆனால் சரி என கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேச்சு எழுந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











