twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடிமேல அடி விழுதே.. வெப்சீரிஸ் பக்கம் திரும்பிய வெரைட்டி நடிகருக்கு காத்திருக்கும் பிரச்சனை?

    |

    சென்னை: துணை நடிகராக இருந்து முன்னணி நடிகராக மாறி உள்ளார் அந்த வெரைட்டி நடிகர்.

    சர்ச்சையான கருத்துக்களை கூறி சில சமயங்களில் சிக்கல்களையும் சந்தித்து வருகிறார்.

    8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகரின் அடுத்த பட அப்டேட்! 8 தோட்டாக்கள், ஜீவி பட நடிகரின் அடுத்த பட அப்டேட்!

    இந்நிலையில், புதிதாக வெப்சீரிஸ் பக்கம் ஒதுங்கவுள்ள அந்த நடிகருக்கு இன்னொரு பெரிய பிரச்சனை காத்திருக்கிறதாம்.

    சர்ச்சை பயோபிக்

    சர்ச்சை பயோபிக்

    பக்கத்து நாட்டு விளையாட்டு வீரரின் பயோபிக்கில் நடிக்கப் போகிறேன் என கிளம்பிய அந்த வெரைட்டி நடிகருக்கு சொந்த ஊரில் கடும் எதிர்ப்பு கிளம்ப வேறு வழியில்லாமல் அந்த படத்தில் இருந்து வெளியேறினார் வெரைட்டி நடிகர்.

    அந்த இயக்குநர்களின் வெப்சீரிஸ்

    அந்த இயக்குநர்களின் வெப்சீரிஸ்

    இந்நிலையில், அடுத்த சர்ச்சையாக சமீபத்தில் வெளியான சமத்து நடிகையின் சர்ச்சை வெப் தொடரை இயக்கிய இயக்குநர்களுடன் அடுத்ததாக புதிய வெப் தொடரில் வெரைட்டி நடிகர் நடிக்க கமீட் ஆகி உள்ள விவரம் கோலிவுட்டுக்கு தெரிந்து எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்துள்ளதாம்.

    வெளியேற வேண்டும்

    வெளியேற வேண்டும்

    அந்த சர்ச்சை இயக்குநர்களின் எந்தவொரு படைப்பிற்கும் இங்கே ஆதரவு கொடுக்கக் கூடாது என்கிற குரல்கள் ஒலித்து வரும் நிலையில், வெரைட்டி நடிகரையும் அந்த வெப் தொடரில் இருந்து வெளியேற வேண்டும் என்கிற எச்சரிக்கை மணிகள் ஒலிக்கத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நடிகையால் தொல்லை

    நடிகையால் தொல்லை

    மேலும், ரவுடி இயக்குநருடன் அந்த வெரைட்டி நடிகர் நடித்து வரும் அந்த டபுள் காதல் படத்திற்கும் அந்த சமத்து நடிகையால் மிகப்பெரிய சிக்கல் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெப்சீரிஸ் என்பதால் எதிர்ப்புகளை மீறி வெளியாகி விட்டது. ஆனால், சமத்து நடிகை நடித்து வரும் படத்திற்கு நிச்சயம் பெரியளவில் எதிர்ப்புகள் கிளம்பினால் வெரைட்டி நடிகருக்கு மேலும் தலைவலி தான் எனக் கூறுகின்றனர்.

    English summary
    After sports biopic cancel due to controversy now versatile actor debut webseries also in trouble.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X