பிரைட் நடிகர் காத்து அடுத்த இயக்குநர் பக்கம் பாய அந்த நடிகர் தான் காரணமா.. கடுப்பில் இயக்குநர்!

By Staff

சென்னை: தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பெரும் முனைப்புடனே நடித்து வருகிறார் அந்த பிரைட் நடிகர்.

மற்ற முன்னணி நடிகர்கள் எல்லாம் இன்னமும் கதையை ஒழுங்காக கேட்காமல் மாஸ், கமர்ஷியல் என வீணடித்து வரும் நிலையில், சரியான திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அந்த நடிகர்.

அப்படி விருது இயக்குநருடன் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என முடிவு செய்து எப்பவோ கால்ஷீட் கொடுத்தும் விருது இயக்குநர் இன்னமும் அந்த படத்தை ஆரம்பிப்பதாய் தெரியவில்லை.

ரொம்ப லேட்

ரொம்ப லேட்

விருது இயக்குநர் இயக்கத்தில் பிரைட் நடிகர் நடிக்க போகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் அந்த படத்திற்கான படப்பிடிப்பை தொடங்காமல் ரொம்பவே லேட் செய்து வருகிறார் அந்த விருது இயக்குநர். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் வீணாகி போய்விடும் என்பதால் நடிகரும் அடுத்த அடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

இழுத்தடிக்கும் நடிகர்

இழுத்தடிக்கும் நடிகர்

காமெடி நடிகரை ஹீரோவாக்கி குறிப்பிட்ட நேரத்தில் இந்த படத்தை எடுத்து முடித்து விடலாம் என இயக்குநர் போட்ட கணக்கில் மொத்தமும் மண் அள்ளி போட்டு விட்டார் அந்த 'வி' எழுத்து நடிகர். சின்ன ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டு மொத்த படத்தின் கதையையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங் வராமல் ரொம்பவே கால தாமதம் செய்து வருகிறாராம்.

அடுத்த இயக்குநர் பக்கம்

அடுத்த இயக்குநர் பக்கம்

நேரம் பொன் போன்றது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட பிரைட் நடிகரோ இவர் இப்படி இழுத்தடிக்கும் நேரத்தில் நாம் இன்னொரு சின்ன படத்தை முடித்து விட்டே வந்து விடுவோம் என இதுவரை இரண்டு, மூன்று படங்களையே முடித்து விட்டார். இந்நிலையில், அடுத்ததாக இன்னொரு இயக்குநருடன் இணைந்து இன்னொரு படத்தையும் பண்ண அவர் கிளம்பி போய் விட்டாராம்.

கடுப்பில் இயக்குநர்

கடுப்பில் இயக்குநர்

இந்த நடிகரை நம்பி இப்படி இந்த படமும் வீணாகிறது. அடுத்த படத்தையும் சொன்ன நேரத்தில் ஆரம்பிக்க முடியவில்லையே என பயங்கர கடுப்பில் அந்த விருது இயக்குநர் உள்ளாராம். ஆனால், கடைசி நேரத்தில் நடிகரிடம் கடிந்து கொண்டால், மீண்டும் பல நாட்களை பலி கொண்டு விடுவார் என நினைத்து வாய் திறக்காமல் எல்லாம் முடியட்டும் என அமைதி காத்து வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X