கிராக்கி அதிகமாகிடுச்சு.. ஹீரோக்கு நிகரா சம்பளம் கொடுத்தா வரேன்னு அடம்பிடிக்கும் வெரைட்டி நடிகர்!

By Staff

சென்னை: கோலிவுட் முதல் பாலிவுட் வரை நீங்க தான் ஹீரோவுக்கு வில்லனாக நடிக்கணும்னு இயக்குநர்கள் வெரைட்டி நடிகரை டார்ச்சர் பண்ணி வரும் நிலையில், இதுதான் சமயம் என தயாரிப்பாளர்களுக்கு செக் வைக்கும் முயற்சியில் குதித்து விட்டாராம் அந்த வெரைட்டி நடிகர்.

சாதாரண ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த அந்த நடிகர் எந்தவொரு பின் புலமும் இல்லாமல் தனது விடா முயற்சியில் இந்த இடத்தை அடைந்திருக்கிறார்.

ஹீரோவாக வாய்ப்பு கிடைத்த நிலையில், இனிமேல் இப்படித்தான் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு நட்புக்காக நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என வித விதமாக நடிக்கத் தொடங்கியதன் விளைவு தற்போது அவரை எங்கே கொண்டு வந்து விட்டுருக்குறது தெரியுமா?

ஹீரோவா வேண்டாம்

ஹீரோவா வேண்டாம்

வெரைட்டி நடிகரின் நடிப்பு ரொம்பவே பிடிச்சிருக்கு என பாராட்டும் அனைவரும் அவரை ஹீரோவாக பார்ப்பதில்லை என்பது தான் பெரிய வருத்தமே. வில்லத்தனத்தில் மிரட்டுறீங்க என பாராட்டி விட்டு, எங்க ஹீரோவுக்கும் வெயிட்டேஜ் ஏற்ற நீங்க வாங்கன்னு ஆல் ஸ்டேட்களில் இருந்தும் அழைப்புகள் வந்த வண்ணமாக உள்ளன. யாருக்குத் தான் கால்ஷீட் கொடுப்பது என்றே தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறாராம் அந்த வெரைட்டி நடிகர்.

புடிச்சிப் போச்சுனா

புடிச்சிப் போச்சுனா

ஹீரோ, வில்லன், நண்பன் என எதையும் அவர் பார்க்காமல் கதையும் தனது கதாபாத்திரமும் புடிச்சிப் போச்சுனா, நடிச்சிக் கொடுக்கிறது என்கிற ஃபார்முலாவைத் தான் இதுவரை பின் பற்றி வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரை ஹீரோவில் இருந்து முற்றிலுமாக வில்லனாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதை தெளிவாக புரிந்து கொண்ட நடிகர் அதற்கு செக் வைக்கும் விதமாக தற்போது அதிரடியான ஒரு விஷயத்தை செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹீரோவுக்கு நிகராக

ஹீரோவுக்கு நிகராக

யாருக்கு வேணா வில்லனா நடிக்கிறேன். ஆனால், உங்க படத்துல ஹீரோவுக்கு கொடுக்குற சம்பளத்துக்கு நிகராக எனக்கு கொடுங்க என ராக்கெட் வேகத்தில் தனக்கு போட்டியாக இருந்த இளம் மாஸ் ஹீரோவின் சம்பளத்துக்கும் அதிகமாக கேட்க ஆரம்பித்து விட்டாராம். அதிகமாக கேட்டாலாவது தன்னை நிம்மதியாக விடுவார்கள் என்று பார்த்தால், அதற்கும் ஓகே சொல்லி நடிகரை புக் செய்ய பலர் காத்திருப்பது தான் இதில் ஹைலைட் என்று கோடம்பாக்கம் முழுவதும் ஒரே பேச்சாக கிளம்பி இருக்கிறது.

வெற்றி பெறுகிறதே

வெற்றி பெறுகிறதே

அந்த நடிகரின் ராசியோ என்னவோ தெரியவில்லை. அவர் வில்லனாக நடிக்கும் படங்கள் பேய்த் தனமாக வசூல் செய்து வெற்றி பெறுவதுதான் இதற்கு காரணம் என்று, தயாரிப்பாளர்களிடம் இயக்குநர்களே பரிந்து பேசி வருகிறார்களாம். தயாரிப்பாளர்கள் ஹீரோக்களையும் இயக்குநர்களையும் பகைத்துக் கொள்ள முடியாத நிலையில், வெரைட்டி நடிகர் கேட்பதை கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.

ரூல்ஸ்

ரூல்ஸ்

இதுமட்டுமின்றி நடிகக் செல்லும் இடங்களில் எல்லாம் ஏகப்பட்ட ரூல்ஸ்களையும் போட்டு வருகிறாராம் அந்த வெரைட்டி நடிகர். ஏதாவது கொஞ்சம் சிணுங்கினாலும், நான் இந்த ஆட்டத்துக்கு வரலைப்பா என கம்பி நீட்டிவிடுவதால், பலரும் பயந்து நடுங்கி அவரையே தற்போது புக் செய்து வருகின்றனர். ஆனால், இன்னும் கொஞ்ச நாளில் இது அவர்களுக்கே போர் அடித்து விடும் என்பதால், இப்போதைக்கு கிடைப்பதை அனுபவித்து வருகிறாராம் அந்த வெரைட்டி நடிகர் என சூட்டிங் ஸ்பாட் லைட்மேன்கள் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X