ஹீரோவா இங்கே இல்லை.. எங்கே போனாலும் அடி விழுதே.. உச்சகட்ட சோகத்தில் வி எழுத்து நடிகர்!

By Staff

சென்னை: வி எழுத்து நடிகர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரும்பாலும் சொதப்பி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்த நடிகர் அதற்காக ஓவர் பில்டப்பும் கொடுத்து வந்த நிலையில், படம் எதிர்பார்த்தபடியே மரண அடி வாங்கியதால் மனுஷன் மயான அமைதியாகி விட்டார் என்கின்றனர்.

சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது நடிகர்களுக்கு சகஜமான ஒன்று தான். ஒரு படம் ஹிட் அடிக்கும். அடுத்த படம் தோல்வியைத் தழுவும். மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்து அந்த நடிகர் மாஸ் காட்டி விடுவார். ஆனால், இந்த வி எழுத்து நடிகருக்கு என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை கடந்த சில ஆண்டுகளாகவே அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தொடர்ந்து வசூலில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.

Versatile Actor upset after his latest movie also gets flop at the Box Office?

வில்லனாக விஸ்வரூபம்: ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஓடாத நிலையில், முன்னணி நடிகர்களுடன் எல்லாம் வில்லனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைக்குமா? என நடிகர் அலைமோத நடிகரின் திறமையை பார்த்த பல இயக்குநர்களும் நடிகர்களும் வில்லன் சான்ஸ் வழங்கி வந்தனர். அந்த படங்களில் வில்லத்தனத்தில் மிரட்டி நடிகர் மிகப்பெரிய வெற்றியையும் ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடித்து அதிக சம்பளத்தையும் வாங்க ஆரம்பித்தார்.

ஈகோ பிரச்சனை: ஆனால், தொடர்ந்து வில்லனாகவே நடித்து வந்தால் இதற்கு பிறகு ஹீரோவாக நடிக்க வாய்ப்பே கிடைக்காது என்றும் தான் ஒரு அக்மார்க் வில்லன் நடிகர் என்றே முத்திரை குத்தி விடுவார்கள் என்கிற ஈகோ பிரச்சனை நடிகருக்கு எழுந்த நிலையில், படங்கள் ஓடலைனாலும், அப்பப்போ ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

வீண் போன நம்பிக்கை: சமீபத்தில் வடக்கில் அவர் நடித்த படத்தை நினைத்து அங்கே பெரிய போட்டிகள் இல்லாமல் படம் வெளியாக போகிறது. வசூலில் நாம் தான் நம்பர் ஒன் ஆக மாறப்போகிறோம் என பகல் கனவு கண்டு விட்டார். ஆனால், அவரது ஒட்டுமொத்த நம்பிக்கையும் வீண் போய் விட்டது. எந்த இடத்திலுமே அவர் நடித்த அந்த படம் ஓடாமல் போக ரொம்பவே மனுஷன் அப்செட் ஆகி விட்டார் என்கின்றனர்.

சோகத்தில் நடிகர்: இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என வீம்புக்கு பேசியது இப்போ சிக்கலில் கொண்டு வந்து விட்டதே என்றும் ஹீரோவாக நடித்தால் படங்கள் ஓடுவதில்லை. இப்படியே போனால், நம்ம நிலைமை என்ன ஆகும்? இதை எப்படி சரி செய்யலாம் என நடிகர் உச்சகட்ட வேதனையில் சில முன்னணி இயக்குநர்களுடன் ஆலோசனையும் கேட்டு வருவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X