தம்பி அங்க போயிடாத.. அலர்ட் பண்ண நடிகை.. வி நடிகர் அந்த படத்தில் இருந்து விலக இதுதான் காரணமா?
சென்னை: கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருந்தாலும், புதுசா யாராவது கால்ஷீட் கேட்டாலும் ஷிஃப்ட் போட்டு கொடுத்து வரும் அந்த வி நடிகரே திடீரென அந்த பேய் படத்தில் இருந்து விலக ஏகப்பட்ட காரணங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், அதெல்லாம் உண்மையான காரணம் இல்லை என்றும் நெருக்கமான நடிகை ஒருவர் செய்த அலர்ட் தான் காரணம் என்றும் புதிய தகவல்கள் புயலை கிளப்பி உள்ளன.
கோலிவுட்டில் நடிகருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை விட மற்ற மொழிகளில் அதிக சம்பளத்துடன் பெரிய வாய்ப்புகள் வந்தாலும், ஆரம்பித்த இடத்தை எப்போதுமே மறக்க கூடாது என அந்த நடிகர் தொடர்ந்து இங்கே வரும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

மொக்கை கதையா இருந்தாலும்
கதை கேட்கும் போதே இந்த படம் ஓடாது என்று தெரிந்தாலும், அந்த கதையை சொல்லும் இயக்குநருக்காகவும், அவருடன் உள்ள நட்புக்காகவும் படம் பண்ணி கொடுப்பதை பழக்கமாகவே கொண்டிருக்கிறார் அந்த வி நடிகர். சில தோல்வி படங்கள் வந்தாலும், தனக்கு இருக்கும் திறமை காரணமாக ஒரு ஹிட் கொடுத்தாலும், லெவல் மாறிவிடும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்.

மனிதர்கள் முக்கியம்
பணம், காசு, வெற்றி, தோல்வி எல்லாவற்றையும் தாண்டி நல்ல மனிதர்களை சம்பாதிப்பது ரொம்பவே முக்கியம் என வி நடிகர் தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை பாகுபாடு பார்க்காமலும் பந்தா காட்டாமலும் நடித்து வருகிறார் அந்த நடிகர்.

அந்த இயக்குநர் படத்தில்
சமீபத்தில், பேய் படங்களை தொடர்ந்து இயக்கி வரும் அந்த காமெடி இயக்குநர் படத்தில் வி நடிகர் கமிட் ஆகி இருந்தார். இப்போ தான் நடிகர் நடிப்பில் ஹிட் படங்கள் வெளியாகி வருகின்றன. மீண்டும் தோல்வி படத்தில் நடிக்க ஏன் சம்மதிக்கிறார் என பலரும் ட்ரோல் செய்து வந்த நிலையில், அதிரடியாக அந்த படத்தில் இருந்து நடிகர் விலகுவதாக தகவல்கள் வெளியாகி பலரையும் ஷாக் ஆக்கின.

சம்பள பிரச்சனை
இயக்குநர் சொன்ன கதை பிடிக்காத காரணத்தினால் நடிகர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என ஒரு தரப்பில் இருந்தும், அதிக கோடிகளை சம்பளமாக நடிகர் கேட்டது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய விஷயம் ஒன்று வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தடுத்த நடிகை
டாப் நடிகரின் படத்தில் இருந்து கணவர் விலக்கப்பட்ட நிலையில், உடனடியாக இன்னொரு படத்தை கணவருக்கு உருவாக்கி தர வேண்டும் என நினைத்த பிரபல நடிகை அந்த கால்ஷீட்டை தனக்கு கொடுக்க முடியுமா என கேட்டது தான் அந்த படத்தில் இருந்து நடிகர் விலக காரணமே என புதிய பூகம்பம் ஒன்று கிளம்பி உள்ளது.

பல படங்களில் இணைந்து
ஏற்கனவே இருவரும் பல படங்களில் இணைந்து நடித்து வரும் நிலையில், புதிதாக பாலிவுட் படத்திலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த நடிகையின் கோரிக்கையை தவிர்க்க முடியாத நிலையில், தான் கமிட் ஆன அந்த படத்தில் இருந்து நடிகர் விலகி விட்டார் என்றும் கூடிய விரைவிலேயே இந்த படம் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











