பண்ணை வீட்டில் நடிகையுடன் கூத்து.. மூத்த நடிகரின் சேட்டை.. விஷயம் தெரிந்து கழட்டிவிட்ட காதலன்!
சென்னை: சினிமா என்றாலே அதில் கிசுகிசு இருக்கும், கிசுகிசுக்கு பஞ்சமே இல்லாத துறையாகத்தான் சினிமாத்துறை இருக்கிறது. மற்றத்துறைகளிலும் இந்த விஷயம் இருந்தாலும் சினிமாவில் இந்த விவகாரமான கசமுசா விஷயம் அப்பட்டமாக தெரிகிறது. அதற்கு காரணம், சோசியல் மீடியா, ஊடகம் என அனைவரின் பார்வையும் சினிமாத்துறை மீது இருப்பது தான். இப்படித்தான் மூத்த நடிகர் ஒருவர், பண்ணை வீட்டில் செய்யும் விவகாரமான வேலை ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முரட்டு சிங்கிளாக இருக்கும் அந்த பெரிய நடிகர் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவோடு, சினிமாவில் பார்ப்பது போல மஞ்ச பையை தூக்கிக்கொண்டுதான் சென்னைக்கு வந்தார். காலில் செருப்புக்கூட இல்லாமல், பசிக்கு சோறு இல்லாமல் பல நாட்கள் கோடம்பாக்கத்தில் சுற்றித்திரிந்த அவருக்கு உதவி இயக்குநராக ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து, ஒரு சில படத்தில் உதவி இயக்குநராக இருந்த அந்த மூத்த நடிகர் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து, தானே ஒரு படத்தை இயக்கினார்.

பெரிய நடிகரின் சேட்டை: அந்த பெரிய நடிகர் இயக்கிய, அந்த கும்மாளமான திரைப்படம் வெளியாக மிகப்பெரிய அளவில் பெற்று, பெரிய நடிகருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல பெயர் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இரண்டாவதாக ஒரு படத்தை அப்போது நன்றாக வளர்ந்து வந்த, ஒரு செவத்த ஹீரோவை இரட்டை வேடத்தில் வைக்க வைத்து இருந்தார்.. அந்த படமும் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை அள்ளியது. அதன் பிறகு ஒரு சில படத்தை இயக்கிய அந்த பெரிய நடிகருக்கு, இப்போது, இயக்குநர்கள் எல்லாம் ஹீரோவாகும் போது நாம், ஹீரோவானால் என்ன தப்பு என நினைத்து வித்தியாசமான ஒரு படத்தை தேர்வு செய்து அதில் ஹீரோவாக நடித்து இயக்கினார். அந்த படமும் வெற்றி பெற்றதால், அந்த பெரிய நடிகருக்கு கர்வம் தலைக்கு ஏறி, பல படத்தை தானே இயக்கி, தானே ஹீரோவாக நடித்தார்.
சில்மிஷம் செய்யும் இயக்குநர்: இயக்குநராக இருக்கும் போதே, படத்தில் ஹீரோயின்களிடம் சில்மிஷம் செய்யும் அந்த பெரிய நடிகர். இயக்குநர், ஹீரோ என தனது திறமையை வளர்த்து கொண்டதால், ஹீரோயின்களிடம் படவாய்ப்பு வேணுமா பண்ணை வீட்டுக்கு வா என்று மிரட்டாத குறையாக கேட்டுள்ளார். இதற்கு சில நடிகைகள் ஒகே சொல்லியும் இருக்கிறார்கள், சிலர் படமும் வேண்டாம், நீயும் வேண்டாம் என்று சொல்லியும் இருக்கிறார்கள். இப்படி ஓவர் ஆட்டம் போட்ட பெரிய நடிகரின் மார்க்கெட் திடீரென சரிந்து, அந்த நடிகர் எங்கடா போனாரு என்று தேடும் அளவிற்கு ஆள் அட்ரஸ்சே இல்லாமல் போய்விட்டார்.
பண்ணை வீட்டில் லீலை: இதைத்தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு படத்தில் அந்த பெரிய நடிகர் வில்லனாக என்ட்ரி கொடுத்து இருந்தார். அந்த வில்லன் ரோல் அவருக்காக உருவாக்கப்பட்டது போல இருந்தது. அந்த படத்தை தொடர்ந்து, தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என எந்த திரைப்படமாக இருந்தாலும், வில்லன் ரோலா கூப்புடு அந்த பெரிய நடிகரை என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டார். சினிமா வாய்ப்பு இல்லாததால் அடங்கி இருந்த அந்த பெரிய நடிகர், மீண்டும் தனது பண்ணை வீட்டின் கதவை திறந்து லீலையை ஆரம்பித்துள்ளார்.
கழட்டிவிட்ட காதலன்: இதில், முதலில் சிக்கியது அந்த டிவி நடிகை தான், கணிசமான படத்தில் நடித்து வரும் அந்த டிவி நடிகை, இந்த பெரிய நடிகருடன் ஜோடி போட்டு நடித்த போது, என் பண்ணை வீட்டுக்கு வந்தால், அடுத்தடுத்து படவாய்ப்பு வரும் என்று சொல்ல, அந்த டிவி நடிகையும் படத்திற்கு ஆசைப்பட்டு சென்றுள்ளார். பண்ணை வீட்டில் ஒருவாரம் இருந்த அந்த நடிகை, பெரிய நடிகரை நன்றாக கவனித்துள்ளார். டிவி நடிகை பண்ணை வீட்டில் இருந்த விஷயம், டிவி நடிகையின் காதலனுக்கு பெரிய வர, அந்த காதலன் அந்த நடிகைக்கு டாடா காட்டிவிட்டாராம், தற்போது, நடிகைக்கு அடுத்தடுத்த படவாய்ப்பு இருந்தாலும், ஆசை ஆசையாய் காதலித்த காதலன் போய்விட்டதால், அம்மணி கதறி அழுது வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











