எழுதி வச்சுக்கோங்க, இவர் தான் பெரிய மொதலாளி டைட்டில் வின்னர்
Recommended Video

சென்னை:தற்போது நடந்து வரும் பெரிய மொதலாளி டிவி நிகழ்ச்சியில் வாரிசு நடிகர் தான் வெற்றி பெறுவார் என்று பேசப்படுகிறது.
பெரிய மொதலாளி நிகழ்ச்சி எதிர்ப்புகளுக்கு இடையே நடந்து கொண்டிருக்கிறது. முதல் சீசனை போன்று இல்லை என்று குறை கூறுகிறார்கள் பார்வையாளர்கள்.

முதல் சீசனில் வெற்றி பெற்றவர் போன்றே எதிலும் பட்டும், படாமலும் நடந்து கொள்கிறார் வாரிசு நடிகர். தன்னை விட வயதில் பெரிய நடிகையை காதலிக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை பேசலாம் என்று கூறினார்.
நடிகையை தனது படுக்கையில் படுக்க வைத்து சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அதன் பிறகு உஷாராக நடந்து வருகிறார் நடிகர். எந்த பிரச்சனையிலும் சிக்குவது இல்லை.
யாராவது புறம் பேசினால் அவர்களுடன் அமர்ந்து அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்கிறாரே தவிர தான் பிரச்சனையில் சிக்குவது இல்லை. முதல் சீசனில் வெற்றி பெற்றவரும் இப்படித்தான் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் தப்பித்து டைட்டிலை வென்றார்.
இந்த சீசனில் வாரிசு நடிகர் தான் வெற்றி பெறுவார் என்று பார்வையாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். அவர் வெற்றி பெற மேலும் ஒரு காரணமும் இருக்கிறதாம். அந்த காரணம் என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications











