பாலிவுட் சவகாசம்.. இரண்டாவது மனைவிக்கும் டாட்டா காட்டிய வில்லன் நடிகர்.. பகீர் கிளப்புறாங்களே!
சென்னை: பிரபல வில்லன் நடிகர் கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற நிலையில், தனது இரண்டாவது மனைவியையும் கழட்டி விட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.
திரையுலக பிரபலங்கள் பல திருமணங்களை செய்வதும், விவாகரத்து பெறுவதும் வாடிக்கையான விஷயமாக மாறிவிட்டன. புதிதாக திருமணம் செய்யும் போது பிரம்மாண்ட திருமண விழாக்களை நடத்தி ஏழு ஜென்மத்துக்கும் இனி நீ மட்டும் தான் என் மனைவி என சொல்வதும், தேனிலவிலேயே சண்டை போட்டு பிரிவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில், முதல் மனைவியை விட்டு விட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட வில்லன் நடிகர் அவரையும் தற்போது கழட்டி விட்டு இருப்பதாக பகீர் கிளப்புகின்றனர்.
இரண்டாவது மனைவியுடன் ஜாலி: சமீபத்தில், இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்ட மனைவியுடன் ஆடுவது, பாடுவது என ஏகப்பட்ட அட்ராசிட்டிகளை அந்த நடிகர் செய்து வந்தார். ஆனால், அதெல்லாம் அதற்குள் முடிந்து விடும் என அவரது புதிய மனைவியே நினைத்து இருக்க மாட்டார் என்று தான் தெரிகிறது. திடீரென இருவருக்குள்ளும் பிரச்சனை வெடித்து சில வாரங்களாக பேச்சுவார்த்தையே இல்லை என திடுக்கிட வைக்கின்றனர்.
பாலிவுட் சகவாசம்: நடிகருக்கு திடீரென பாலிவுட்டில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த நிலையில், அடிக்கடி மும்பைக்கு சென்று வந்த அவர் அங்கேயே இன்னொரு நடிகையுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் அதனால் தான் இரண்டாவது மனைவியுடன் சமீபத்தில் சண்டை போட்டு பிரிந்து இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
அந்த விஷயத்தில் வீக்: பெண்கள் விஷயத்தில் அந்த நடிகர் ரொம்பவே வீக் என்றும் அடிக்கடி பல பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து வருவதை பழக்கமாக கொண்டிருக்கும் அவரால் இரண்டாவது மனைவி உடன் தொடர்ந்து வாழ விருப்பமில்லை என்றும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
விரைவில் விவாகரத்து: நடிகரை நம்பி ஏமாந்து போய் விட்டோமே என அவரது இரண்டாவது மனைவி ரொம்பவே வருத்தப்பட்டு கதறி அழுது வருவதாகவும் விரைவில் நடிகரை விவாகரத்து செய்து பிரிய நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











