மகனுக்கு வாய்ப்பு வேட்டை நடத்தும் வில்லன் நடிகர்!
உயரமான வில்லன் நடிகரின் மகன் வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார். மகனுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதில் குறியாக இருக்கிறாராம் அப்பா நடிகர்.
உயரத்துக்குப் பெயர் பெற்ற இந்த வில்லன் நடிகர் அதிகமாக போலீஸ் வேடத்தில் நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவரது மகனையும் சினிமாவுக்கு கொண்டு வந்தார். அப்பாவைப் போலவே நல்ல உயரமும் உடல்வாகும் கொண்ட மகனுக்கும் வில்லன் வாய்ப்புகள் வருகின்றன. மகனை எப்படியும் முன்னணிக்கு கொண்டு வர வேண்டும் என்று மும்முரமாகச் செயல்படுகிறார் அப்பா.
தன்னை நடிக்க அழைக்கும் இயக்குநர்களிடம் மகனுக்கு வாய்ப்பளித்தால் தனக்கு சம்பளமே வேண்டாம் என்று சொல்லிவிடுகிறாராம். சமீபத்தில் அப்பா நடித்த மூன்று படங்களிலும் மகன் நடித்திருந்ததன் ரகசியம் இதுதான்.
Comments


Click it and Unblock the Notifications