»   »  டைவர்ஸுக்கு தயாராகும் "இளைய மகள்"?.. பரபரப்பில் கோலிவுட்!

டைவர்ஸுக்கு தயாராகும் "இளைய மகள்"?.. பரபரப்பில் கோலிவுட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் வீட்டில் தற்போது புதிதாக ஒரு பிரச்சினை முளைத்துள்ளதாம். ஏற்கனவே ஒல்லி மருமகன் நடிகையுடன் தொடர்பில் இருப்பதால் மூத்த மகள் வீட்டில் பிரச்சினை என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது இளைய மகளும் கணவருடன் மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இலை மறை காயாக இருந்த இந்த பிரச்சினை தற்போது நெருங்கிய சிலரால் வீதிக்கு வந்து விட்டது.

VIP couple to go separate?

அதாகப்பட்டது கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் இவருக்கு தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமாக இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை சரி இல்லையாம். தனித்தனியாகத் தான் வசித்து வருகிறார்களாம். ஆனால் இந்த விவகாரம் கோர்ட் படி ஏறி விடாமல் இருதரப்பு பெரியவர்களும் போராடி வருகிறார்களாம். எப்படியும் பேச்சுவார்த்தை மூலம் இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்து விட வேண்டும் என்பது அவர்களது எண்ணமாம்.

இப்படி தனது இரண்டு மகள் வீட்டிலும் பிரச்சினைகள் வெவ்வேறு ரூபத்தில் தலை விரித்து ஆடுவதால், சமீபத்திய டான் பட வெற்றியால் கிடைத்த மகிழ்ச்சியைக்கூட அனுபவிக்க முடியாமல் படு அப்செட்டில் இருக்கிறாராம் நடிகர்.

English summary
According to reliable sources, the famous tamil actor’s second daughter and her husband have decided to separate.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X