»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

சிம்ரன், மும்தாஜ் இடையே மோனல் தற்கொலை தொடர்பாக எழுந்துள்ள மோதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் ஒருபெரும்புள்ளி.

மோனல் தற்கொலை நடந்த அன்று அவரது வீட்டிற்கு முதலில் வந்த மும்தாஜ் அங்கிருந்த பல பொருள்களைத் திருடிச் சென்று விட்டதாகவும், மோனலின்காதல் டைரி உள்பட சில தடயங்களை எடுத்துச் சென்றுவிட்டதாகவும், கனடாவில் இருந்து அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது கட் செய்துவிட்டதாகவும் சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார் சிம்ரன்.

இதையடுத்து சிம்ரனை போனில் தொடர்பு கொண்டார் அந்தப் பெரும்புள்ளி. முதலில் மோனல் இறப்பு குறித்து துக்கம் விசாரித்தவர் அடுத்தபடியாக சகநடிகைகளைப் பற்றி இப்படியெல்லாம் பேசுவதா, மும்தாஜும் உங்களைப் போலவே பீக்கான இடத்தில் இருப்பவர், அவரை இப்படியா இன்சல்ட் செய்வதுஎன்று அறிவுரை கூறியுள்ளார் அந்த பெரும்புள்ளி.

மும்தாஜுடன் சமாதானமாக போகுமாறு மென்மையாக கூறியுள்ளார். பெரும்புள்ளியிடம் இருந்து அழைப்பு வந்ததால் முதலில் காலும் ஓடாமல் கையும்ஓடாமல் தவித்த சிம்ரன், அவரது எல்லா அறிவுரைகளையும் ஏற்பதாக உறுதியளித்தார்.

இதன் பின்னர் அந்தப் பெரும்புள்ளி தனது நெருங்கிய நண்பரும் சிம்ரனுக்கு இப்போது மிகவும் வேண்டப்பட்டவரான லோட்டஸ் நாயகனிடமும் பேசியிருக்கிறார்.சிம்ரனுக்கு நல்ல அறிவுரை வழங்குமாறு அவரிடம் பெரும்புள்ளி கூறியிருக்கிறார்.

இந்த உரையாடலுக்குப் பிறகே மேற்கொண்டு வாய் திறக்காமல் அமைதியாக உள்ளாராம் சிம்ஸ்.

பெரும்புள்ளியின் பாபமான படத்தில் மும்தாஜ் ஒரு குலுக்கல் டான்ஸ் போடப் போகிறார் என்பது போனஸ் செய்தி.

முன்னதாக பெரும்புள்ளியைச் சந்தித்து அழமாட்டாத குறையாக தனது தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்னாராம் மும்ஸ். அதன் பிறகே இந்த முயற்சியில்இறங்கினாராம் அவர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil