தொகுப்பாளினி விவாகரத்து: இங்கேயும் வந்துட்டீங்களா மகாபிரபு???
சென்னை: பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இங்கேயும் வந்துட்டீங்களா மகாபிரபு என்று நெட்டிசன்ஸ் கேட்கிறார்கள்.
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சினிமாவில் யார் வீட்டில் விவாகரத்து நடந்தாலும் அதற்கு காரணம் மகாபிரபு என்று நெட்டிசன்ஸ் பேசத் துவங்கிவிடுகிறார்கள்.
இந்நிலையில் அம்மணியின் விவாகரத்திற்கு பின்னாலும் மகாபிரபு இருப்பதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. சிலர் ஒருபடி மேலே போய் அம்மணியும், மகாபிரபுவும் டச்சில் இருப்பதாக சில சம்பவங்களை மேற்கோள் காட்டியுள்ளனர்.
இனி அம்மணி மகாபிரபுவின் ஆதரவில் இருப்பார் என்றும் நெட்டிசன்ஸ் கிண்டல் செய்கிறார்கள். ஏற்கனவே ஒரு நடிகைக்கு விவாகரத்தானபோதும் மகாபிரபுவின் பெயர் தான் அடிபட்டது.
மேலும் ஒரு பெரிய இடத்து விவாகரத்திலும் மகாபிரபுவின் பெயர் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











