இனி ஆயுதம் படத்திற்கு எந்த பிரச்சனையும் வராது: நிம்மதியில் தயாரிப்பாளர்
சென்னை: குத்தும் ஆயுதத்தின் பெயர் கொண்ட படத்தின் சேட்டிலைட் உரிமம் அதிகாரம் உள்ளவர்களின் டிவி வசம் இருப்பதால் படம் பிரச்சனை இன்றி ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் நிம்மதியாக உள்ளாராம்.
தளபதி நடித்துள்ள குத்தும் ஆயுதத்தின் பெயர் கொண்ட படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் விண்ணைத் தொடும் அளவுக்கு எதிர்ப்பும், பிரச்சனையும் கிளம்பியது. படம் எப்படி ரிலீஸாகப் போகிறதோ என்ற கவலையில் படக்குழு இருந்தது. இந்நிலையில் தான் அந்த அதிசயம் நடந்தது.
படத்தின் சேட்டிலைட் உரிமத்தை அதிகாரம் உள்ளவர்களின் டிவி சேனல் வாங்கிவிட்டது. இதனால் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று வரிந்து கட்டி வந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.
படம் அதிகார வர்க்கத்தின் கையில் உள்ளதால் அது பிரச்சனை இன்றி ரிலீஸாகும் என்று சர்ச்சையில்லாத தயாரிப்பாளர் நிம்மதி அடைந்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications










