மாஸ் நடிகருக்கு எதிராக உச்ச நட்சத்திரங்களை இறக்கியதே அதற்குத்தானா?.. பெரும்புள்ளியின் பக்கா பிளான்!
சென்னை: உச்ச நட்சத்திரங்கள் இணையும் படம் இப்போதைக்கு ஆரம்பிக்காத சூழலில் ஏன் இப்படியொரு அறிவிப்பு வெளியானது என்றும் அதற்கு பின்னணியிலும் மாஸ் நடிகர் தான் உள்ளார் என்றும் கிசுகிசுக்கள் கோடம்பாக்கத்தில் கிளம்பி உள்ளன.
மக்களுக்கு நடிகர்கள் மீதுள்ள கிரேஸ் தமிழ்நாட்டில் பலமுறை பெரிய தாக்கங்களையும் மாற்றங்களையும் நிகழ்த்தி உள்ளன. அதனை பெரும்புள்ளியும் சரியாக புரிந்தே வைத்துள்ள நிலையில் தான் கடைசி நேரத்தில் மாஸ் நடிகருக்கு எதிராக எப்படியெல்லாம் காய் நகர்த்த முடியுமோ அந்த வகையில் எல்லாம் செக்மேட் வைத்து வருகிறார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்ச நடிகர் போட்ட போஸ்ட்டுக்கும் சமீபத்தில் வெளியான அறிவிப்புக்கும் கூட்டி கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும் என கோடம்பாக்கம் கோடாங்கி குறி சொல்கிறார்.
ஏற்கனவே பெரிய லிஸ்ட்: ஒரு பக்கம் பாஸ் நடிகருக்கும் ஒரு பக்கம் உச்ச நடிகருக்கும் ஏகப்பட்ட லைன் அப் கைவசம் உள்ள நிலையிலும், திடீரென இப்படியொரு அறிவிப்பு வெளியாக என்ன காரணம் என்பது தான் இப்போதைக்கு கோலிவுட்டில் பலரது மண்டையை போட்டுக் குழப்பும் கேள்வியாக மாறியுள்ளது. உடனடியாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்காது என்றும் தொடங்கவே ஒரு வருடம் ஆகும் என்றும் கூறுகின்றனர்.
உச்ச நடிகர் கைவசம்: உச்ச நடிகர் கைவசம் ஏற்கனவே 2 படங்கள் உள்ள நிலையில், அந்த படங்களை எல்லாம் முடித்து ரிலீஸ் செய்த பின்னர் தான் அடுத்த படத்துக்கே அவரால் செல்ல முடியும் என்கின்றனர். ஆனால், இதற்கு நடுவே ஏன் திடீரென அவசர கதியில் ஒரு அறிவிப்பு வெளியானது என்றும் அதுவும் வரப்போகிற அந்த பெரிய நிகழ்வுக்கு முன் வந்து விட்டதே என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
மாஸ் நடிகருக்கு எதிராக: மாஸ் நடிகரின் படத்தை வரவிடாமல் தடுத்ததில் இருந்து பல சினிமா பிரபலங்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு சிறப்புகளை செய்வது மற்றும் உச்ச நடிகர்களே எங்கள் பக்கம் தான் என்பதை அறிவிக்கவே இப்படியொரு டிராமாவை பெரும்புள்ளி நடத்தியுள்ளார் என்று கூறுகின்றனர். எத்தனை முயற்சிகளை செய்து ஒருவரை முடித்துக் கட்ட முடியுமோ அத்தனையையும் பக்காவாக செய்து வருவதால் இதையெல்லாம் தாண்டி தனது பலத்தை அந்த நடிகர் காட்டுவாரா? அல்லது டல்லடித்து டவுன் ஆகிவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











