மாஸ் நடிகருக்கு செக் வைத்தாரா அரசியல் வாரிசு?.. அடி பணியாத நிலையில் தான் இப்படியொரு ஆப்பா?

By Staff

சென்னை: மாஸ் நடிகரின் படத்திற்கு கடைசி நேரத்தில் அரசியல் வாரிசு தான் கட்டையைப் போட்டுள்ளார் என பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. தயாரிப்பு நிறுவனமும் எங்கப்பன் புதருக்குள் இல்லை என்பது போல அப்படியொரு விளக்கத்தை கீழே கொடுக்க காரணமும் அதுதான் என்கின்றனர்.

சினிமா விழாவாக நடைபெற்றால் அனுமதி கிடைக்கும் என்றும் அரசியல் மாநாடாக மாறினால் அனுமதி மறுப்பு என்றும் மேலிடத்தில் இருந்து அதிக அழுத்தம் எழுந்த நிலையில் தான் இப்படியொரு முடிவையே கடைசி நேரத்தில் எடுக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பதாக கூறுகின்றனர்.

What is the real reason behind Popular actor big meet get cancelled?

இன்னமும் அந்த டீலிங்கிற்கு ஒத்துவரைவில்லை என்றால் படமே பிளான் பண்ண மாதிரி ரிலீஸ் ஆக விடமாட்டேன் என அரசியல் வாரிசு அலப்பறையை கிளப்பி இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

பெரிய வசூல் வரும்: மாஸ் நடிகரின் இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்பதால், அந்த லாபத்தை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்கிற பக்காவான பிளானை அரசியல் வாரிசு போட்டு இருந்ததாகவும் ஆனால், தமிழ்நாட்டு உரிமையை விட்டுக் கொடுத்தால் தயாரிப்பாளருக்கும் தனக்கும் மிகப்பெரிய லாபம் அடிவாங்குமே என நினைத்த மாஸ் நடிகர் சொந்த ரிலீஸுக்கு திட்டம் போட்டது தான் இப்படி அவரை பல பிரச்சனைகள் துரத்த காரணம் என்கின்றனர்.

அரசியல் வாரிசு வைத்த செக்: தங்களுக்கு சேர வேண்டியதை ஒதுக்கி விட்டு தாராளமாக என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோங்க என அரசியல் வாரிசு வைத்த கோரிக்கையை மாஸ் நடிகர் நிராகரித்த நிலையில் தான் தற்போது அடுத்தடுத்த செக் வைத்து நடிகருக்கு செக்மேட் வைக்கும் முயற்சிக்கு வாரிசு சென்று விட்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

அந்த பிரச்சனை தான் காரணம்: இதற்கும் அந்த அரசியல் வாரிசுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் இன்னொரு அரசியல் கட்சி யார் என்ன செய்தாலும் டூப்ளிகேட் டிக்கெட்டுகளை அடித்து விநியோகிக்க தயாராக இருப்பது தான் இந்த பிரச்சனைக்கே முக்கிய காரணம் என்றும் இன்னொரு தரப்பு பேச்சுக்கள் பதை பதைக்க வைக்கின்றன.

சிக்கினால் சின்னா பின்னம்: வேடர்கள் வலை விரித்து காத்துக் கொண்டிருக்க சிங்கம் சிங்கிளா சிக்கினால் சின்னா பின்னமாகிவிடும் படத்தின் ரிலீஸுக்கே சிக்கல் வந்து விடும் என்பதை அறிந்து கொண்டு தான் உஷாராக அந்த நிகழ்ச்சியே வேண்டாம் என்றும் தனியாக பேட்டி வைத்து பேசிக் கொள்கிறேன் என்கிற முடிவுக்கே மாஸ் நடிகர் வந்து விட்டதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X