சங்க தலைவரும், வாரிசு நடிகையும் ஊரை ஏமாற்றுகிறார்களா?
Recommended Video

சென்னை: சங்க தலைவரும், வாரிசு நடிகையும் பிரிந்தது போன்று தெரியவில்லையே என்று தான் பேச்சு கிளம்பியுள்ளது.
சங்க தலைவர் வாரிசு நடிகையை காதலித்து வந்தார். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. நடிகையும் சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது சங்க தலைவரை கடுப்பேற்றத் தான் என்றார்கள் விபரம் அறிந்தவர்கள்.
இந்நிலையில் சங்க தலைவரின் படத்தில் அவருக்கே வில்லியாக நடித்துள்ளார் வாரிசு நடிகை.

நடிகை
நேற்று நடந்த இசை வெளியீட்டு விழா ஒன்றில் வாரிசு நடிகையும், சங்க தலைவரும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியதை பார்த்தால் காதல் முறிந்தது போன்று தெரியவில்லை.

மேடை பேச்சு
மேடையில் பேசிய சங்க தலைவரோ வாரிசு நடிகைக்காகவும் தான் நிகழ்ச்சிக்கு வந்தேன் என்றார். இவர்களின் காதல் எல்லாம் முறியவில்லை ஏதோ நாடகமாடுகிறார்கள். ஆனால் எதற்கு என்று தான் தெரியவில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

அந்த நடிகை?
சங்க தலைவர் வாரிசு நடிகையை பிரிந்த பிறகு அண்டை மாநில நடிகை ஒருவருடன் ஊர் சுற்றுவதாகவும், அவரை தான் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. அப்போ அந்த காதல் சும்மாவா?

எது உண்மை
சங்க தலைவரின் காதலி வாரிசு நடிகையா, அண்டை மாநில நடிகையா, ஒரே குழப்பமாக உள்ளது. தலைவரே நீங்க தான் கொஞ்சம் தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











