மாஸ் நடிகரின் பட காட்சிகள் லீக் ஆவதற்கு காரணம் அந்த கருப்பு ஆடு தானாம்.. கண்டித்த இயக்குநர்!
சென்னை: மாஸ் நடிகர் நடிப்பில் உருவாகி வரும் அந்த புதிய படத்தின் காட்சிகள், தகவல்கள் இணையத்தில் வைரலாக கசிந்து வருகிறது.
இதற்கெல்லாம் காரணமான கருப்பு ஆட்டை இயக்குநர் கண்டுபிடித்து, கண்டபடி திட்டியுள்ளாராம்.
மாஸ் நடிகரின் பழைய நண்பரான அவர், இனிமே இப்படி பண்ண மாட்டேன், ப்ளீஸ் இந்த விஷயத்தை தோஸ்த்து கிட்ட சொல்லிடாதீங்க என கெஞ்சியுள்ளாராம்.

ஆரம்பத்தில் இருந்தே அலப்பறை
தனது பழைய நண்பர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்த அந்த மாஸ் நடிகர், தனது புதிய படத்தில் சிறு சிறு ரோல்களில் நடிக்க வாய்ப்புக் கொடுத்துள்ளார். மாஸ் நடிகரின் நட்பை கேடயமாக பயன்படுத்தி அதில் ஒரு நடிகர் படப்பிடிப்பு தளங்களில் ஓவர் பில்டப் செய்து அலப்பறை செய்து வந்துள்ளார்.

காட்சிகள் லீக்
தனது நண்பரின் படம் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் மொபைல் போனில் திருட்டுத் தனமாக எடுத்த காட்சிகளை அந்த நடிகர் தான் சமூக வலைதளங்களில் ஃபேக் ஐடிக்கள் மூலம் பரப்பி உள்ளாராம். சமீபத்தில் வெளியான சண்டை காட்சியை கூட இவர் தான் தனது ஃபேக் ஐடி டிக் டாக்கில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

வீண் பழி
மாஸ் நடிகரின் படம் குறித்த தகவல்களை மறைமுகமாக சமூக வலைதளத்தில் தெரிவித்து வரும் அந்த நிர்வாண பட இயக்குநர் தான் இதுபோன்று காட்சிகள் லீக் ஆகவும் காரணம் எனவும் அவர் மீது வீண் பழியை படக்குழுவினரிடையே சூசகமாக பற்ற வைத்துள்ளார் அந்த நடிகர்.

சுதாரித்துக் கொண்ட
இந்நிலையில், யார் மூலமாக படத்தின் தகவல்கள், காட்சிகள் கசிகிறது என யோசித்த அந்த இளம் இயக்குநர், கருப்பு ஆடு இவர் தான் என சுதாரித்துக் கொண்டுள்ளார். மாஸ் நடிகரின் பழைய நண்பர் என்பதால், தனியாக அழைத்து கண்டபடி திட்டி விட்டு, அவரது காதுக்கு இந்த விசயத்தை போடட்டுமா எனக் கேட்டுள்ளார்.

மன்னிப்பு
இனிமே இது போல பண்ண மாட்டேன். தோஸ்த் கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க, அப்புறம் என் பொழப்பு ரொம்ப மோசமாகிடும். இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுடுங்க என அந்த நடிகர் கெஞ்சியுள்ளாராம். படமும் முடியும் தருவாயில் இருப்பதால், இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என அந்த இளம் இயக்குநர் வெறும் எச்சரித்து மட்டும் விட்டுள்ளாராம். ஆனால், இந்த விஷயம் மாஸ் நடிகரின் காதுகளுக்கும் சென்றுள்ளதாக கோலிவுட்டில் பேசிக்கிறாங்க..


Click it and Unblock the Notifications











