நடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா?
சென்னை: இளம் நடிகையின் காதலர் எந்த நடிகர் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இளம் நடிகை ஒருவர் வளர்ந்து வரும் நடிகரை காதலித்தார். ஆனால் அவர் நடிகையின் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து அழுது புலம்பிய நடிகைக்கு வாரிசு நடிகர் மீது காதல் வந்ததாக செய்திகள் வெளியாகின.
வாரிசு நடிகரும், நடிகையும் சீரியஸாக காதலிப்பதாக கூறப்பட்டது.

நடிகை
வாரிசு நடிகரின் காதலியாகிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் நடிகை அந்த வளர்ந்து வரும் நடிகருடன் ஜோடி போட்டு ஊர் சுற்றுகிறார். யாராவது பார்த்தால் சிரித்து மழுப்புகிறார்.

புகைப்படம்
நடிகை, வளர்ந்து வரும் நடிகர், வாரிசு நடிகர் சேர்ந்து பார்ட்டி பண்ணியுள்ளனர். அதை பார்த்தவர்களுக்கு இந்த இரண்டு நடிகர்களில் நடிகையின் காதலன் யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பட வாய்ப்பு
நடிகை தன்னை தேடி பட வாய்ப்புகள் வந்தபோது ஏற்கவில்லை. அதனால், தற்போது அவருக்கு மவுசு குறைந்துள்ளது. மார்க்கெட்டை ஏற்றும் வகையில் விளம்பரம் தேடும் வேலையில் அவர் இறங்கியுள்ளார்.

காதல்
வாரிசு நடிகருக்கு இந்த காதலாவது கைகூடும் என்று எதிர்பார்த்தால் நடிகை இப்படி செய்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்தால் தான் இந்த குழப்பம் தீரும்.


Click it and Unblock the Notifications









