Don't Miss!
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Lifestyle
வாழைப்பூ கட்லெட்
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
யாரு பார்த்த வேலையா இருக்கும்.. விவாகரத்து நடிகரின் ரெக்கார்டு எல்லாம் இப்படி வீணாப் போச்சே!
சென்னை: மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் ஒல்லி நடிகரின் சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டு பெரும் பிரச்சனையை கிளப்பி உள்ளது.
சமீப காலமாக படங்கள் சரியாக ஓடாத நிலையில், சமூக வலைதள பக்கத்தை நம்பித்தான் பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், அதற்கும் முற்றிலுமாக யாரோ வேட்டு வைத்த நிலையில், நடிகர் யாரை சந்தேகப்படுவதே தெரியவில்லை என பெரும் குழப்பத்தில் உள்ளாராம்.
அமெரிக்காவில் மட்டும் 3 லட்சம் டாலர்களை குவித்த டான் படம்... மிரட்டலான வசூலா இருக்கே!

ஹேக் செஞ்சிட்டாங்க
ஒல்லி நடிகரின் சமூக வலைதள பக்கத்தை யாரோ சில விஷமிகள் ஹேக் செய்து விட்டதால் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளாராம் அந்த நடிகர். தென்னிந்தியாவிலேயே தன்னிடம் தான் பெரிய ரெக்கார்டுகள் இருப்பதாக கர்வத்துடன் சுற்றித் திரிந்த நடிகருக்கு இப்படியொரு எண்ட் கார்டு போட்டுட்டாங்களேன்னு நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

அவர் காரணமா
உச்ச நடிகரின் மகளை பிரிந்து உல்லாசமாக வாழ்வதால் நடிகருக்கு வேண்டியவர்கள் யாராவது இப்படி ஹேக் செஞ்சிட்டாங்களா என்றும், இல்லை எக்ஸ் கணவரை பழிவாங்க டெக்னாலஜி அனைத்தும் தெரிந்த தங்கையை வைத்து மனைவியே இப்படியொரு வேலையை பார்த்து விட்டாரா என்றும் ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பி உள்ளன.

காப்பி பிரச்சனை
ஆனால், அதெல்லாம் இல்லைங்க.. சமீபத்தில் ஒல்லி நடிகர் அந்த ஓமக்குச்சி மியூசிக் டைரக்டர் உடன் இணைந்து போட்ட அந்த ஆரம்ப கால ஹிட் பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கியது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என நடிகருக்கு ரொம்பவும் நெருக்கமான வட்டத்தில் இருந்தே தகவல்கள் கசிந்து வருகின்றன.

மீட்பாரா
இந்த பிரச்சனையை சீக்கிரமாக தீர்க்கும் முயற்சியில் அந்த நடிகர் தீவிரம் காட்டி வருகிறார். அனைத்து பதிவுகளையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்றும், எதுவும் டெலிட் ஆகி விடக் கூடாது என்றும் ரொம்பவே செலவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தை மீட்க நடிகர் போராடி வருகிறாராம். சினிமாவில் பிசியாக உள்ள நிலையில், நம்பிக்கையாக இந்த பணியை யாரிடம் கொடுப்பது என்றும் புரியாமல் அவரே களத்தில் இறங்கி வேலை பார்த்து வருவதாக கூறுகின்றனர்.

தொடரும் பிரச்சனை
மனைவியை பிரிந்த பின்னர் ஒல்லி நடிகரின் மார்க்கெட் ரொம்பவே அதள பாதாளத்திற்கு சென்று வருவதாகவும், இதற்கு முன்னதாக அவருக்கு இருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாகவும் அவருக்கு வர வேண்டிய புதிய வாய்ப்புகளும் இளம் நடிகர்களை நோக்கி நகர்வதாகவும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.