twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிளாக்பஸ்டர்னு சொல்றாங்க.. அப்புறம் லோ பட்ஜெட்ல படம் பண்றாங்க.. என்ன நடக்குதுன்னே தெரியலையே?

    |

    சென்னை: அந்த மாஸ் ஹீரோவை வைத்து திடீரென பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அந்த படத்திற்கு பிறகு ஆல் அட்ரஸே தெரியாமல் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

    மேலும், மறுபடியும் படம் பண்ணினாலும் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் படத்தை தயாரிக்கின்றனர்.

    தயாரிப்பு தரப்பினரிடையே வெளிப்படைத் தன்மை இல்லாததே இதற்கு காரணம் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    இஷ்டத்துக்கு சம்பளம்

    இஷ்டத்துக்கு சம்பளம்

    கனவுத் தொழிற்சாலையான சினிமாவில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டும் இஷ்டத்துக்கு சம்பளம் கூடிக் கொண்டே போகிறது. துணை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான சம்பளம் சரியாக கூட வழங்கப்படாத நிலையில், பலர் சினிமாவை விட்டே காணாமல் போகும் அவல நிலையையும் வறுமையில் வாடி இறந்து போகும் சோகங்களையும் பார்த்து வருகிறோம்.

    காணாமல் போகும் தயாரிப்பாளர்கள்

    காணாமல் போகும் தயாரிப்பாளர்கள்

    பல கோடி முதலீட்டை போட்டு மொக்கை கதைகளில் சிக்கி சின்னாபின்னமாகி ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் ஆல் அட்ரஸே தெரியாமல் காணாமல் போகும் நிலையும் தமிழ் சினிமாவில் தலை விரித்து ஆடுகிறது. பல கோடிகளில் ஹீரோக்களின் சம்பளம் இருப்பது தான் இதற்கு காரணம் என்று சொன்னாலும் எந்த ஒரு டாப் ஹீரோவும் சினிமாவின் இந்த நிலையை மாற்ற முன்னுக்கு வருவதில்லை.

    பிளாக்பஸ்டர் ஹிட்

    பிளாக்பஸ்டர் ஹிட்

    மெகா பட்ஜெட்டில் அதிக பொருட்செலவில் கதையே இல்லாமல் எடுக்கும் சில படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து விட்டதாக தயாரிப்பாளர்களே தம்பட்டம் அடிக்கின்றனர். ஆனால், எத்தனை கோடி வசூல் ஈட்டியது என்பதை மட்டும் வெளிப்படையாக சொல்ல மறுக்கின்றனர். அந்த படத்தின் ஆரவாரம் முடிந்த பிறகு இவர்களும் அப்ஸ்காண்ட் ஆகி விடுகின்றனர்.

    லோ பட்ஜெட்டில்

    லோ பட்ஜெட்டில்

    பெரிய நடிகர்களை வைத்து திடீரென பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அதன் பிறகு லோ பட்ஜெட்டில் படமெடுக்கவே சில ஆண்டுகளை எடுத்துக் கொள்ளும் நிலையும் கோலிவுட்டில் சமீப காலமாக நிகழ்ந்து வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது.

    ரகசியம் காக்கும் தயாரிப்பாளர்கள்

    ரகசியம் காக்கும் தயாரிப்பாளர்கள்

    ஹீரோவின் பணத்தை வாங்கியே படமெடுத்து லாபத்தையும் அவருக்கே கொடுத்து விட்டு மீண்டும் பழைய படிக்கே செல்வதால் தான் பெரிய பட்ஜெட் படங்களை எடுத்த தயாரிப்பு நிறுவனங்கள் அதன் பின்னர் சிறிய பட்ஜெட் படங்களை எடுக்கவே காலதாமதம் செய்கின்றன என்றும் கோலிவுட்டில் பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. வெளிப்படைத் தன்மை இல்லாமல் பல தயாரிப்பாளர்களும் ரகசியம் காத்து வருவதால் தான் இந்த நிலைமை என்றும் கூறுகின்றனர்.

    English summary
    Big and Blockbuster film producers turned to make a low budget films stirs controversy in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X