»   »  டான்ஸ் மாஸ்டர் ஒரே நாளில் இரு படங்களை ரிலீஸ் செய்வது ஏன் தெரியுமா?

டான்ஸ் மாஸ்டர் ஒரே நாளில் இரு படங்களை ரிலீஸ் செய்வது ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

டான்ஸ் மாஸ்டர் நடிகரின் இரண்டு படங்களை ஒரே நாளில் ரிலீஸ் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறார். அப்படி ஒன்று நடந்தால் ஏதாவது ஒரு படம் பாதிக்கும் என்று சுற்றிலும் இருப்பவர்கள் பயமுறுத்தி வருகிறார்கள். இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

கன்னட படத்தின் ரீமேக்காக அவரது ஒரு படம் உருவாகியுள்ளதல்லவா... இந்தப் படம் நேரடி தமிழ் படம் கிடையாதாம். தெலுங்கில் நேரடியாக எடுக்கப்பட்டு தமிழில் டப் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. டப்பிங்கில் பல இடங்கள் இதனைக் காட்டிக்கொடுக்கிறதாம். தெலுங்கு நேரடி ரிலீஸ் என்பதால்தான் புரமோஷன் விஷயத்திலும் தமிழை விட தெலுங்கு பக்கம் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

Why dance master tries to release his 2 movies simultaneously?

ஆனால் மொட்ட படம் அப்படி கிடையாது. தமிழில் நேரடியாகி உருவாகி 6 மாதங்களுக்கு முன்பே தயாரான படம். அந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த தேதியை விட்டால் நல்ல தேதி கிடைக்காது என்று, இந்த தேதியில்தான் வெளியிடுவேன் என்று அடம் பிடிக்கிறார். அந்த தெலுங்கு படம் இந்த தேதியில் கண்டிப்பாக தெலுங்கில் ரிலீஸ் ஆகியே ஆகவேண்டும். இரண்டு தயாரிப்பாளர்களும் ஃபைனான்ஸியர்களின் நெருக்கடியால் இந்த முடிவு எடுத்துள்ளார்கள்.

கன்னட ரீமேக்கை முதலில் தெலுங்கில் ரிலீஸ் செய்துவிட்டு பின்னர் இங்கே களம் இறக்கினாலும் பாதிக்கும். எனவே என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் மாஸ்டர்.

இதற்கிடையே அரசியல் வாய்ஸ் வேறு கொடுத்து மாட்டிக்கொண்டுவிட்டார். இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு காத்திருக்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Why Dance Master hero is trying to release both his movies simultaneously? Here are the reasons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil