திருமணம் செய்துகொண்டு என் மகனோடு சுத்து.. ப்ளீஸ் சிதைச்சிடாதே.. நடிகையிடம் கெஞ்சிய நடிகரின் தந்தை
சென்னை: தமிழ்நாட்டில் யாருமே எதிர்பார்க்காத ஒன்று கடந்த மாதம் அரங்கேறியது. இவரால் எல்லாம் நம்மை ஒன்றுமே செய்ய முடியாது என்று மிதப்பில் இருந்த இரண்டு அதிகார மையங்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார் நடிகர். வந்த வேகத்திலேயே டாப்புக்கு சென்ற அவரை பார்த்து அனைவருமே ஆச்சரியத்தில் உறைந்திருக்கிறார்கள். இதை இப்படியே காப்பாற்றிகொள்ள வேண்டிய பொறுப்பு நடிகருக்கு இருக்கும் சூழலில்; அவரது செயல்பாடு கொஞ்சம் பிசிறு தட்டுவது போல் இருப்பதை உணர்ந்த நடிகரின் தந்தை; நடிகையிடம் கெஞ்சி ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறாராம்.
சினிமாவுக்குள் அந்த நடிகர் வந்தபோது கேட்காத இழி சொல் இல்லை; கிண்டல்கள் இல்லை. அனைத்தையும் தாங்கிக்கொண்டு திரைத்துறையில் டாப் இடத்தை பிடித்தார். சினிமாவில் எப்படி தாக்கத்தை நிகழ்த்தினாரோ அதேபோல் அரசியலிலும் செலுத்த வேண்டும் என அவரை பார்த்து பார்த்து செதுக்கினார் தந்தையார். தந்தை ஆசைப்படி அனைத்துமே நடந்து; இப்போது மாநிலத்தின் அடையாளமாக மாறியிருக்கிறார் நடிகர். அதை நினைத்து உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் தந்தையார்.

தந்தையாரின் அடுத்தக்கட்ட கணிப்பு: இனிமேல் நடிகரின் கைகளில் இருப்பது ஒன்றே ஒன்றுதான். மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். அதேபோல் இழந்துவிட்ட நற்பெயரை மீண்டும் மீட்க வேண்டும். அப்படி மட்டும் செய்துவிட்டால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு நடிகரின் அலைதான் தமிழ்நாட்டில் வீரியமாக வீசும் என்பது தந்தையின் உறுதியான கணிப்பாக இருக்கிறது. அவர் இதுவரை கணித்ததெல்லாம் அப்படியே நடந்திருப்பதால் இதுவும் நடக்கும் என்ற உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார்.
தேவையில்லாத சகவாசம்: சூழல் இப்படி இருக்க நடிகரின் மீது நடிகை விஷயத்தில் பெரிய கரும்புள்ளி ஒன்று விழுந்திருக்கிறது. அதை போகப்போக சரி செய்துகொள்வார் என்றுதான் எல்லோருமே எதிர்பார்த்தார்கள். ஆனால் நடிகரின் செயல்பாடோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. ஏற்கனவே மனைவி விஷயத்தில் இமேஜ் டேமேஜ் ஆகியிருக்கிறது. அதை இப்போது சரி செய்வார் என்று பார்த்தால்; நண்பரின் வீட்டில் நடந்த துக்க நிகழ்வுக்கு மீண்டும் அதே நடிகையுடன் ஒரே காரில் வந்து இறங்கினார்.
அப்செட்டில் தந்தை: இதை பார்த்து அவரது ரசிகர்களும், தொண்டர்களும் உண்மையில் அப்செட் ஆகிவிட்டார்கள். அனைத்தும் கூடி வந்திருக்கும் நேரத்தில் இவர் இப்படி செய்கிறாரே என தங்களுக்குள் நொந்துகொள்கிறார்கள். அதிகார மைய நடிகரின் தந்தையோ இன்னும் சோகமாகிவிட்டாராம். எவ்வளவு சொல்லியும் இந்த விவகாரத்தில் மகனின் பிடியை தளர்த்த முடியவில்லையே என தன் மனைவியிடமும், உறவினர்களிடமும் கதறுகிறாராம். நடிகரிடமும் நேரடியாக பேசி பார்த்தும் எந்தவிதமான பயனும் இல்லையாம்.
நடிகையிடம் கெஞ்சிய தந்தை: அதிலும் துக்க வீட்டுக்கு இப்படி நடிகையோடு செல்வார் என எதிர்பார்க்காத தந்தை; இனிமேல் மகனிடம் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்துகொண்டாராம். நள்ளிரவு துக்க வீட்டிலிருந்து நடிகை திரும்பியதை தெரிந்துகொண்ட தந்தை; அதிகாலை வாக்கில் நடிகையை நேரில் சந்தித்தாராம். அப்போது நடிகையிடன் தாயும் உடன் இருந்திருக்கிறார். இனிமேல் என் மகனோடு நீ சுற்றக்கூடாது; அவனது ரேஞ்சே இப்போது வேறாக இருக்கிறது. வேண்டுமென்றால் திருமணம் செய்துகொண்டு ஜோடியாக வெளியே வா, போ. அதுவரைக்கும் இப்படி ஜோடியாக சுற்றுவது மகனின் எதிர்காலத்துக்கே வேட்டு வைத்துவிடும் என கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினாராம். இதனால் என்ன முடிவெடுப்பது என்ற ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாராம் அம்மணி.


Click it and Unblock the Notifications
