அப்போ ஏன் அந்த நடிகை அப்படி சொன்னார்?: உண்மை என்ன?
Recommended Video

சென்னை: பாலியல் புகார் தெரிவித்துள்ள நடிகை ஒருவர் கொடுத்த பேட்டி பற்றி தான் பேச்சாக கிடக்கிறது.
தமிழ் இயக்குனர் ஒருவர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார் தெரிவித்தார். அதை அந்த இயக்குனர் மறுத்தார். இந்நிலையில் அந்த இயக்குனர் தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் படத்தின் ஹீரோயின் ஒருவர் தெரிவித்தார்.
உடனே இயக்குனர் அந்த நடிகைக்கு போன் செய்து மிரட்டினார்.

இயக்குனர்
அந்த இயக்குனரின் படத்தில் நடித்து முடித்த பிறகு நடிகை பேட்டி அளித்தார். அப்போது மீண்டும் அதே இயக்குனரின் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார். இந்நிலையில் அந்த இயக்குனர் மீது நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொய்
படப்பிடிப்பின்போது பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்பட்ட நடிகை தற்போது வேறு மாதிரியாக கூறியுள்ளார். அப்படி என்றால் முன்பு அவர் தனது கெரியர் பாதிக்கப்படும் என்ற பயத்தில் அப்படி பேட்டி கொடுத்தாரா இல்லை தற்போது யாராவது தூண்டிவிட்டு புகார் தெரிவித்துள்ளாரா என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

புகார்
யார் பேச்சையும் கேட்டு நடப்பவர் அல்ல அந்த நடிகை. அதனால் அவர் யார் சொல்லியும் இயக்குனர் மீது புகார் தெரிவித்திருக்க மாட்டார். முன்னணி நடிகையாக இருக்கும் அவரே பட வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று பயந்து இத்தனை நாட்களாக அந்த இயக்குனரை நல்லவர் என்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மீ டூ
முன்னணி நடிகையே ஒரு இயக்குனர் மீது பாலியல் புகார் தெரிவிக்க இவ்வளவு காலம் எடுத்துக் கொண்ட நிலையில் வளர்ந்து வரும் நடிகைகள் எப்படி வாய் திறப்பார்கள். அவர்கள் பேசினால் அவர்களின் சினிமா வாழ்க்கை நாசமாகிவிடும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியுமே. தைரியமாக பேசி மக்களின் பாராட்டுகளை வாங்கிவிட்டால் பட வாய்ப்பு வராதே என்றே பல நடிகைகள் பயப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











