போதை நடிகர் நண்பரை தயாரிப்பாளர் ஆக்கியதன் ரகசியம்!
சமீபத்தில் போதை தலைக்கேறி கார் ஓட்டி விபத்தில் சிக்கிய நடிகர் தனது நண்பர் தயாரிப்பில் நடிப்பதன் ரகசியம் தெரிய வந்திருக்கிறது.
நடிகருக்கு இண்டஸ்ட்ரியில் ஏகப்பட்ட கெட்டப் பெயர். ஷூட்டிங்குக்கு வராமல் சொதப்புவது, புரமோஷனுக்கு வருவதில்லை என்பது முதல் போதை தலைக்கேறி மாட்டுவது வரை கிட்டத்தட்ட இன்னொரு வம்பு நடிகராகவே மாறி வருகிறார்.
எனவே நடிகரை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்கள். அதனால்தான் சக நடிக நண்பரையே தயாரிப்பாளர் ஆக்கி நடிக்கிறாராம்.
நடிகர் இந்தப் படத்துக்கு சம்பளமே வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications