பொள்ளாச்சி விஷயத்தில் கருத்து கந்தசாமி நடிகர் அமைதி ஏன்?
சென்னை: எதற்கெடுத்தாலும் பெரிய இவர் மாதிரி கருத்து தெரிவிக்கும் நடிகர் பொள்ளாச்சி விஷயத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.
பொள்ளாச்சியில் 200 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பலில் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பயங்கரத்தை கண்டித்து திரையுலக பிரபலங்கள் பலர் ட்வீட் செய்துள்ளனர்.

நம்ம உலக நாயகன் வீடியோவே வெளியிட்டுள்ளார். ஆனால் எதற்கெடுத்தாலும் கருத்து தெரிவிக்கும் அந்த கருத்து கந்தசாமி நடிகர் மட்டும் இதுவரை எதுவுமே கூறவில்லை.
ட்விட்டர் பக்கம் வந்தால் தானே கருத்து சொல்லணும் என்று அந்த பக்கமே வரவில்லை மனிதர். கருத்து தெரிவித்தால் களத்தில் இறங்கி உதவச் சொல்லிவிடுவார்களோ என்று நினைத்து தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் போன்று.
ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் மனிதர் பெண்கள் விஷயத்தில் இப்படி இருக்கும் இடம் தெரியாமல் இருப்பது ஏனோ?. அடுத்தவர்களை ஆர்வமுடன் விமர்சிக்கும் அவர் அந்த குற்றவாளிகளை ஏன் விளாசவில்லை?


Click it and Unblock the Notifications











