டிவி ஹீரோவுக்கு இந்த வீம்பு தேவை தானா?
சென்னை: டிவி ஹீரோ ஏன் இந்த ரிஸ்க் எடுக்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டிவி ஹீரோவும், சமத்து நடிகையும் சேர்ந்து நடித்துள்ள படம் கணேசனை கொண்டாடும் நாள் அன்று வெளியிடப்படும் என்று அவர்களாகவே அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இது தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

டிவி ஹீரோ
டிவி ஹீரோ படம் வெளியாகும் என்று அறிவித்துள்ள அதே நாளில் தான் ஒல்லியின் படமும் ரிலீஸாகிறது. ஒல்லியுடன் மோதுவதற்காக டிவி ஹீரோ இந்த அளவுக்கு ரிஸ்க் எடுப்பது தேவை தானா?

மோதல்
டிவி ஹீரோவை வளர்த்து விட்டு அழகு பார்த்தவர் ஒல்லி. ஒல்லியை பிரிந்த பிறகு டிவி ஹீரோ பெரிய ஆளாகிவிட்டார். இந்நிலையில் வளர்த்து விட்ட ஏணியுடனேயே மோதத் துணிந்துவிட்டார் டிவி ஹீரோ.

தெரிந்து தானா?
டிவி ஹீரோ விளம்பரத்திற்காக தனது படத்தை ஒல்லி நடிகரின் படம் ரிலீஸாகும் அதே நாளில் வெளியிடுகிறாரா? தயாரிப்பாளர் சங்கத்தை பகைத்துக் கொண்டு இந்த மோதல் தேவை தானா?

தலைவர்
டிவி ஹீரோவின் படத்தை வெளியிடுவது குறித்து சங்கத் தலைவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பதை எல்லாம் அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கிறார் ஒல்லி.


Click it and Unblock the Notifications









