Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அந்த விவகாரத்தில் வாயே திறக்காமல் மெளனம் காக்கும் ஒல்லி நடிகர்.. பாடகி அப்படி பாய காரணம் என்ன?
சென்னை: ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் லீக்கான மேட்டரில் அந்த பாடகி தொடர்ந்து அந்த ஒல்லி நடிகரையே கோர்த்து விட்டு பேசி வருகிறார்.
ஆனால், அவரோ இது தொடர்பாக எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருப்பது ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பி வருவதாக பேச்சுக்கள் கிளம்பி வருகின்றன.
அப்போதைக்கு அந்த விஷயம் அப்படியே மூடி மறைக்கப்பட காரணமே உச்ச நடிகரின் தலையீடு தான் என்கின்றனர்.
சினிமாவில்
உள்ள
சாக்கடையை
சுத்தம்
செய்கிறேன்..ஆதாரத்துடனே
கிசுகிசு
பேசுகிறேன்..
பயில்வான்
ரங்கநாதன்!

நடிகைகளுடன் ஜாலி
மனைவி இயக்கிய படத்திலேயே அந்த வாரிசு நடிகையுடன் ஒல்லி நடிகர் கும்மாளம் போட்டார் என ஏகப்பட்ட பிரச்சனைகள் கிளம்பின. அத்துடன் நிற்காமல், விவாகரத்து நடிகை, பாடகி, தொகுப்பாளினி என பலருடனும் நெருக்கமாக அந்த நடிகர் பழகி வந்ததாக திடுக்கிடும் புகைப்படங்கள் லீக்காகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

லீக் சர்ச்சை
நம்பர் நடிகையுடன் அந்த காதல் படத்தில் நடித்ததில் இருந்தே அதில் நடித்த நடிகருடன் ரொம்பவே நெருக்கமான நட்பு வட்டத்தில் ஒல்லி நடிகர் இருந்து வந்த நிலையில் தான் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் அந்த பாடகி வசம் சிக்கியதாகவும், அவர்களுக்குள் நடந்த பிரச்சனை தான் அதனை அவர் வெளியிடக் காரணமே என்கின்றனர்.

அப்படியே ஆஃப்
ஆனால், அந்த பாடகிக்கு மனநிலை சரியில்லை என முத்திரைக் குத்தி அப்படியே அந்த மேட்டரை ஆஃப் செய்து விட்டனர். அந்த நேரத்தில் ஒல்லி நடிகரை முற்றிலுமாக மகளுக்காக மாமனார் தான் காப்பாற்றினார் என்கின்றனர். அப்போதிருந்தே, குடும்பத்தில் பிரச்சனை தான் என்றும் அது முற்றிய நிலையிலேயே சமீபத்தில் இருவரும் பிரியக் காரணம் என்கின்றனர்.

பாடகி புகார்
இந்நிலையில், சமீபத்தில் அந்த யூடியூபர் மீது புகார் அளித்த பாடகி கூடவே அந்த ஒல்லி நடிகரின் பெயரையும் சேர்த்தே புகார் அளித்திருந்தார். ஆனால், அப்போது முதல் இப்போது வரை இந்த விவகாரம் குறித்து வாயே திறக்காமல் மெளனம் காத்து வருகிறார் ஒல்லி நடிகர்.

சிக்கி இருக்காரா
அவதூறு பரப்பியதும் அதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒல்லி நடிகர் அமைதி காத்து வருவதற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்கிற பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. மேலும், ஏதாவது பெரிய வீடியோ ஆதாரம் ஏதாவது அந்த நடிகையிடம் இருக்கிறதா? அல்லது இப்போது வாய் திறந்தால் பிரச்சனையில் மீண்டும் சிக்கி விடுவோம் என நினைக்கிறாரா? என பலரும் பல மாதிரி பேசி வருகின்றனர்.

அண்ணனே துணை
மனைவியை பிரிந்த நிலையில், பல இடங்களில் இருந்தும் ஒல்லி நடிகருக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், தான் அடுத்தடுத்து அண்ணனுக்கு கால்ஷீட்டுகளை வாரி வழங்கி, அண்ணனே துணை என தஞ்சம் அடைந்திருக்கிறார் என கோடம்பாக்கத்தில் பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது. இதிலிருந்து எப்படி மீளப் போகிறாரோ அவர் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் புலம்பி வருகின்றனர்.