ஏதாவது எடக்கு மடக்கா பேசிட்டா சிக்கலாகிடும்.. தயாரிப்பு தரப்புக்கு பறந்த எச்சரிக்கை.. என்ன நடந்தது?

By Staff

சென்னை: மாஸ் நடிகரின் இசை வெளியீட்டு விழா கடந்த சில வருடங்களாகவே கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால், இந்த முறை அதற்கு வாய்ப்பில்லை என தயாரிப்பு தரப்பு திடீரென அறிவிக்க என்ன காரணம் என ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் குழம்பிப் போயுள்ளனர்.

அரசியல் ரீதியாக நடிகர் ஏதாவது எடக்கு மடக்கா பேசிட்டா சிக்கலாகிவிடும் என கருதியே இந்த நிகழ்ச்சியை தயாரிப்பு தரப்பு ரத்து செய்து விட்டதா என்கிற பேச்சுக்களும் அடிப்பட்டு வருகின்றன.

வருஷத்துக்கு ஒரு முறை

வருஷத்துக்கு ஒரு முறை

சினிமாவில் நடிப்பதை தாண்டி வருஷத்துக்கு ஒரு முறை தனது ஒட்டுமொத்த ரசிகர்களுக்காக அந்த நடிகர் பேசுவது கடந்த சில ஆண்டுகளாகவே அவருடைய புதிய படத்தின் ரிலீசுக்கு மேல் பெரிய திருவிழாவாக மாறிவிட்டது. ரசிகர்களை கவரும் விதமாகவும், சினிமா புரமோஷனுக்கு உதவும் விதமாகவும் தொடர்ந்து அவரும் அசத்தலான பேச்சுக்களை பேசி வந்தார்.

அரசியல் பார்வை

அரசியல் பார்வை

மேலும், அரசியல் மீது தனக்கு இருக்கும் பார்வைகளையும், தனது ரசிகர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும், தனக்கே ஆளுங்கட்சியினர் கொடுத்த டார்ச்சர்கள் குறித்தும் அவர் பேச பேச சர்ச்சைகளும், விவாதங்களும் அடுத்த நொடியே சூடுபிடிக்க தொடங்கி விடும். இந்நிலையில், இந்த முறை மாஸ் நடிகர் மைக்கை பிடித்து என்ன பேசப் போகிறார் என்பதை கேட்கவே ரசிகர்கள் அதிக ஆர்வலுடன் காத்திருந்தனர்.

நிகழ்ச்சி ரத்து

நிகழ்ச்சி ரத்து

ஆனால், இந்த முறை திடீரென அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், என்ன நடந்தது? என்கிற கேள்வி தான் அனைவர் மத்தியில் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இந்நிலையில், பல யூகங்களும் அதை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன.

தயாரிப்பு தரப்புக்கு பறந்த எச்சரிக்கை

தயாரிப்பு தரப்புக்கு பறந்த எச்சரிக்கை

அதில், ஒன்றாக மாஸ் நடிகர் படத்தை தயாரித்து வரும் ஆளுங்கட்சியின் நெருங்கிய நிறுவனமான அந்த தயாரிப்பு தரப்புக்கு பறந்த எச்சரிக்கைத் தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்த நிகழ்ச்சி ரத்தாக காரணம் என்கின்றனர். அப்படி என்ன தான் எச்சரிக்கை பறந்தது என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

சிக்கலாகி விடும்

சிக்கலாகி விடும்

நடிகர் மீது போடப்பட்ட வழக்கு உள்ளிட்ட ஏகப்பட்ட விவகாரங்கள் உள்ள நிலையில், மாஸ் நடிகர் ஏதாவது தனது மனதுக்கு பட்டதை பட்டென பொதுவெளியில் போட்டு உடைத்து விட்டால் அது ஆளுங்கட்சிக்கு தேவையில்லாத சிக்கலாகி விடும் என்பதால் தான் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யக் கூறியிருக்கிறார்களாம்.

தேவையில்லாத மைலேஜ்

தேவையில்லாத மைலேஜ்

மேலும், சமீப காலமாக அந்த நடிகரின் ரசிகர்கள் அரசியலில் அசத்தி வரும் நிலையில், அவர்களையும் அவர்களது கட்சியையும் மேலும், பலப்படுத்தும் விதமாக நடிகர் நிச்சயமாக ஒரு சில வார்த்தைகளை பேச வேண்டிய நிலை வரும் அது தேவையில்லாத மைலேஜை கொடுக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சியை ஒட்டுமொத்தமாக நிறுத்த சொல்லி உத்தரவு வரவே நடிகர் காதுக்கும் விஷயங்கள் போக அவரும் ஓகே வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.

பேட்டி மட்டுமே

பேட்டி மட்டுமே

ஆனால், அதே சமயம் படத்தின் புரமோஷனுக்காக நடிகர் பேசும் பேட்டியை மட்டும் எடுத்து வெளியிட அந்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், அதில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் நடிகர் பேசும் பதில்களில் எதை போட வேண்டும் எதை நீக்க வேண்டும் என அனைத்தையுமே மேலிடம் தீர்மானிக்கும் என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X