கணவனுக்கு இனிமேலும் சப்போர்ட் பண்ணா நமக்குத் தான் கச்சேரி.. கழட்டிவிட திட்டம் போட அதுதான் காரணமா?

By Staff

மும்பை: கசமுசா விவகாரத்தில் கணவன் கம்பி எண்ணி வரும் நிலையில், ஆரம்பத்தில் அதிகமாக முட்டுக் கொடுத்த வந்த மனைவி நடிகை தற்போது கணவனையே கழட்டி விடும் முடிவுக்கு வர முக்கியமான விஷயம் காரணமாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்தியா முழுக்க மட்டுமின்றி சர்வதேச ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆனவர் அந்த பிரபல நடிகை.

கோடி கோடியாய் சம்பாதிக்க நினைத்து ஷார்ட் கட்டில் கணவன் சென்ற நிலையில், ஒட்டுமொத்த புகழையும் இழந்து நிற்கிறார்.

பிரபல நடிகை

பிரபல நடிகை

கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏகப்பட்ட படங்களில் நடித்து புகழின் உச்சம் சென்றவர் அந்த நடிகை. ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். உலகம் முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு இருந்து வந்த நிலையில், சமீபத்திய சர்ச்சை அவருக்கு மிகப்பெரிய சங்கடத்தை உருவாக்கி விட்டது.

அந்த மாதிரி படம்

அந்த மாதிரி படம்

நடிகைகளை ஆடையில்லாமல் மற்ற ஆண்களுடன் நெருங்கி பழக விட்டு தினுசு தினுசாக அந்த மாதிரி தப்பான படங்களை எடுத்து வந்த நடிகையின் கணவர் போலீசாரின் வலையில் கையும் களவுமாக சிக்கி கம்பி எண்ணி வருகிறார். நடிகையும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளாரா என்கிற கோணத்தில் ஆரம்பத்தில் இருந்தே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தப்பான படம் இல்லை

தப்பான படம் இல்லை

ஆரம்பத்தில் கணவருக்கு ஆதரவாக அவர் எடுத்த அந்த மாதிரியான படங்கள் எதுவும் தப்பான படங்கள் இல்லை. வழக்கமாக இங்கே பலரும் அதே போல் தான் படங்களை எடுத்து வருகின்றனர் என பெரிதும் வாதாடி வந்தார். ஆனால், சமீப காலமாக நடிகைக்கு கணவன் மூலமாக வேறு பல சிக்கல்கள் உருவாகி வருவதால் நடிகை பொறுமையை இழந்து விட்டாராம்.

கழட்டி விட முடிவு

கழட்டி விட முடிவு

இதுவரை என் புருஷன் குழந்தை மாதிரி என அவருக்கு ஆதரவாக பேசி வந்த மனைவி இனிமேல் அவருக்கும் எனக்கும் எந்தவொரு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கணவனை கழட்டி விடும் முடிவுக்கே இறங்கி வந்து விட்டாராம். இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னால் இன்னொரு பெரிய பிரச்சனை இருப்பது தான் காரணம் என்கின்றனர்.

பல கோடி மோசடி

பல கோடி மோசடி

கசமுசா விவகாரம் மட்டுமின்றி நடிகையின் கணவன் பல இடங்களில் பண மோசடிகளிலும் இஷ்டத்துக்கு புகுந்து விளையாடி இருக்கிறாராம். கணவன் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், அத்தனை பேரும், நீங்கள் தானே அவருக்கு ஆதரவா பேசுறீங்க, நீங்க தானே அவரோட மனைவி.. என கழுத்தை நெறிக்கவே நடிகை வேறு வழி தெரியாமல் இப்படியொரு முடிவை எடுக்க துணிந்து விட்டதாக பாலிவுட் பாட்ஷா தகவல் கொடுத்துள்ளார்.

நிலைமை மோசம்

நிலைமை மோசம்

ஒரு பக்கம் போலீசாரின் கெடுபிடி மற்றொரு பக்கம் கடன் தொல்லை மேலும் ஏகப்பட்ட மோசடி புகார்கள் என சிக்கி சின்னாபின்னமாகி வருவதால் நடிகையின் நிலைமை ரொம்பவே மோசமாகி உள்ளதாம். திரைத் துறையில் தெரிந்த நண்பர்கள் கூட தற்போது நடிகைக்கு எந்த விதத்திலும் உதவும் நிலையில் இல்லை என கை விரிக்கவே இப்படியொரு கழட்டி விடும் நாடகத்தை அரங்கேற்ற போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X