பல கோடி செலவு பண்ணதெல்லாம் வீணாப்போச்சே.. திடீரென பிரம்மாண்டம் அப்படி அறிவிக்க என்ன காரணம்?

By Staff

சென்னை: பல கோடி செலவு செய்து அப்படியொரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்த பிரம்மாண்டம் திடீரென அனைத்தையும் நிறுத்தியது பெரும் பரபரப்பை கோடம்பாக்கத்தில் கிளப்பி உள்ளது.

கோலிவுட் பெரும் புள்ளிகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பத்தான் இப்படியொரு நிகழ்ச்சிக்கே அவர் ஏற்பாடு செய்திருக்கிறார் என பலரும் பேசி வந்த நிலையில், இப்படியொரு திடீர் அறிவிப்பை யாருமே எதிர்பார்க்கவில்லையாம்.

செட், சாப்பாடு, பத்திரிகை என கோடிக் கணக்கில் செலவு செய்த நிலையில், அந்த நிகழ்ச்சியை நிறுத்துவதற்கு அப்படி என்ன காரணம் என சில நெருங்கிய திரையுலக நண்பர்களே போன் செய்து விசாரித்து வருகின்றார்களாம்.

பிரம்மாண்ட நிகழ்ச்சி

பிரம்மாண்ட நிகழ்ச்சி

கோலிவுட்டை விட்டு பக்கத்து ஸ்டேட்டில் படம் பண்ணி வரும் அந்த பிரம்மாண்டம் ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தினர் பார்வையையும் தன் பக்கம் திருப்பும் முயற்சியாக ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். தனக்கு முதல் படத்தை கொடுத்தவர் முதல் பல முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பும் விடுத்து வந்தார்.

ரொம்ப லேட்

ரொம்ப லேட்

முடிஞ்சு போன கல்யாணத்துக்கு அடிடா மேளம் என்பது போல அந்த நிகழ்ச்சி முடிந்து ஒரு வருடம் ஆகும் நிலையில், இப்போது அதற்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சி வைப்பதற்கு பின்னணியிலேயே ஒரு பெரிய பிளான் இருக்கும் என சிலர் இயக்குநர் காது படவே பேசியுள்ளது அவரை ரொம்பவே அப்செட் ஆக்கி வந்தது. ஆனாலும், எடுத்துக் கொண்ட முயற்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப லேட் ஆனாலும், நிகழ்ச்சியை செய்து விட வேண்டியது தான் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார்.

கோடிக் கணக்கில் செலவு

கோடிக் கணக்கில் செலவு

பல லட்சம் செலவு செய்து பத்திரிகையும், சில கோடிகள் செலவு செய்து அந்த நிகழ்ச்சியை நடத்த தனது படங்களுக்கு போடுவதை போலவே பிரம்மாண்ட செட்டும் போட பிரபல கலை இயக்குநர் ஒருவரையே புக் செய்து அனைத்து வேலைகளையும் செய்து உள்ளார். இன்னும் ஒரீரு நாளில் நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிலையில், திடீரென அத்தனையையும் நிறுத்தி விட்டது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

மன்னிப்பு மெசேஜ்

மன்னிப்பு மெசேஜ்

தவிர்க்க முடியாத சூழலில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட ரொம்பவே தயங்கிய இயக்குநர் வேறு வழியின்றி பல பிரபலங்களுக்கும் மன்னிப்பு மெசேஜ் போட்டும் சில முக்கிய பிரபலங்களுக்கு தனிப்பட்ட முறையில் போன் செய்தும் இப்போதைக்கு முடியாது, இன்னும் கொஞ்ச நாள் கழித்து நடத்துறேன்.. தேதியை அப்புறம் சொல்றேன் என கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம்.

என்ன ஆச்சு

என்ன ஆச்சு

மாப்பிள்ளை வீட்டுத் தரப்பினர் கடைசி நேரத்தில் செய்த பிரச்சனை தான் இப்படி திட்டமிட்டு பல கோடிகளை கொட்டி செலவு செய்ததை எல்லாம் அதிரடியாக நிறுத்த வேண்டிய நிலைக்கு பிரம்மாண்டம் தள்ளப்பட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. சீக்கிரமே அனைத்தும் சுமூகமாக முடிந்தால், உடனடியாக நிகழ்ச்சியின் புதிய தேதியை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X