twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எதிரியான நண்பர்கள்.. இந்த முறை நிச்சயம் ஒர்க் அவுட் ஆகாது.. சத்தம் போடாமல் ஒதுங்கினார் பிரபல ஹீரோ!

    By
    |

    சென்னை: கூட இருந்தவர்களே எதிரி ஆகிவிட்டதால், அந்த ஹீரோ சத்தம் போடாமல் ஒதுங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

    கடந்த சில வருடங்களுக்கு முன் அதிரடியாக சில சினிமா விஷயங்களில், முன்னால் நின்றார் அந்த ஹீரோ.

    பழைய ஹீரோக்களின் நடவடிக்கைகளில் பலர் அதிருப்தியாக இருந்ததால், அவருக்கு ஏகப்பட்ட ஆதரவு.

    கட்டிடம் கட்டுவதற்கு

    கட்டிடம் கட்டுவதற்கு

    இதை வைத்து ஆக்டிங் சங்கத்து தேர்தலில் நின்றார். ஆக்டரின் ஆக்டிவை பார்த்து வெற்றி

    பெற வைத்தார்கள். முன்னாள் நிர்வாகிகள் மீதும் ஊழல் புகார்கள் எழுந்தன. வழக்குத் தொடரப்பட்டது. பின்னர் கட்டிடம் கட்டுவதற்காக, கலைநிகழ்ச்சிகள் உட்பட சில நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இதில் நல்ல பெயர் கிடைத்தது. அந்த ஹீரோ, படத்துக்கு பணம் போடுபவராகவும் இருக்கிறார்.

    அதிலும் வெற்றி

    அதிலும் வெற்றி

    இதனால், அந்தச் சங்கத்திலும் போட்டியிட்டார். சில முன்னாள்களுக்கு இது தாங்க முடியாததாக இருந்தது. பிறகு அந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார். அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு குரூப் மொத்தமாக முட்டுக்கட்டைப் போட்டது. சில நல்ல விஷயங்களை கூட செயல்படுத்த விட மறுக்கிறார்கள் என்று சிலரிடம் வருத்தப்பட்டார் நடிகர்.

    எதிரி ஆனார்கள்

    எதிரி ஆனார்கள்

    பிறகு, அவர் கூட இருந்தவர்களையே, சில முன்னாள்கள் அவருக்கு எதிரியாக்கினார்கள். அதற்கு தோதான சில விஷயங்களும் நடந்தது. பிறகு உடன் இருந்த ஒவ்வொருவரும் தனியாகச் செல்ல, நடிகர் அப்செட். இப்போது நீதிமன்றம் போய் நடக்கிறது, அடுத்த தேர்தல். இதில் போட்டியிடும் அணிகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

    ஓட்டு கிடைக்காது

    ஓட்டு கிடைக்காது

    அந்த நடிகரும் போட்டியிட முடிவு செய்திருந்தாராம். ஆனால், தனது ஆட்களை வைத்து விசாரித்ததில் ஒரு ஓட்டுக் கூட கிடைக்காது என்று தெரியவந்ததாம். நல்ல செய்தும் நல்ல பேர் கிடைக்கலையே என்று வருத்தப்பட்ட ஹீரோ, தேர்தலில் இருந்து ஒதுங்கிவிட்டாராம். இதனால் இந்த வருட தேர்தல் எந்த சர்ச்சையும் பரபரப்பும் இல்லாமல் நடக்கும் என்கிறார்கள்.

    English summary
    Sources reveals the reason, Why that actor did not contest the election?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X