இவர் இப்படிக் கேட்க, அவங்க அப்படி சொல்ல... அதனாலதான் அந்தப் படத்துல இருந்து ஹீரோ விலகிட்டாராம்!

By

சென்னை: அந்த ஹீரோ, சம்பளமாகக் கேட்ட கோடிகள் கிடைத்தும் அந்தப் படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது.

தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டே வில்லனாகவும் நடிப்பவர் அவர். 'கேரக்டர் நல்லாருக்கு' என்றால் உடனே நடிக்க சம்மதிப்பவர் அவர்.

தமிழைத் தாண்டி, தெலுங்குக்கும் சென்றார். அங்கும் ஹீரோவின் நடிப்பும் எளிமையும் பிடித்துப் போக, அதிகமான வாய்ப்புகள் வந்தன.

இளம் ஹீரோ படம்

இளம் ஹீரோ படம்

இங்கு சில கோடிகளை சம்பளமாக வாங்கும் ஹீரோ, இங்கு வாங்குவதை விட அதிகமாகக் கேட்கிறாராம். சரி என்று அவர்கள் தாராளமாகக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள இளம் ஹீரோ ஒருவரின் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க சம்மதித்திருந்தார், ஹீரோ. இதற்காக பல கோடிகள் சம்பளமாகப் பேசப்பட்டதாம்.

5 மொழிகளில்

5 மொழிகளில்

படத்தில் அந்த தெலுங்கு இளம் ஹீரோ, லாரி டிரைவராகவும் இவர் அதிகாரியாகவும் நடிப்பதாகக் கூறப்பட்டது. கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் உள்ள கேரக்டர். எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த நிலையில்தான் தெரிய வந்ததாம் ஹீரோவுக்கு, அந்த படத்தை ஐந்து மொழிகளில் எடுக்கப் போகிறார்கள் என்பது. பான் இந்தியா முறையில் அவர்கள் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்கின்றனர்.

நானே நடிக்கிறேன்

நானே நடிக்கிறேன்

இதனால், அந்த அதிகாரி கேரக்டரில் ஒவ்வொரு மொழியில் இருந்தும் அந்தந்த மொழி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க, இயக்குனர் முடிவு செய்திருந்தாராம். தமிழுக்கு மட்டும் இந்த ஹீரோவை நடிக்க வைத்துவிட்டு கன்னடத்துக்கு வேறொரு நடிகரை பேசியிருந்தார்களாம். இதைக் கேள்விபட்ட அந்த நடிகர், என்னை எல்லா மொழியிலயும் தெரியும். அதனால மற்ற மொழிகள்லயும் நானே நடிக்கிறேன் என்றாராம்.

லாக்டவுன்

லாக்டவுன்

அதற்கு சம்பளத்தை இன்னும் கொஞ்சம் கேட்டதாகச் சொல்கிறார்கள். இதை எதிர்பார்க்கவில்லையாம், அந்த இயக்குனர். இதையடுத்து அந்த நடிகரை நீக்கிவிட்டு, தெலுங்கில் நடித்து வரும் மற்றொரு தமிழ் நடிகரான அந்த சிம்மா நடிகரை அணுகி இருக்கிறார்களாம். அவர் ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்திருப்பதால், ஓகே சொல்லிவிட்டார் என்கிறார்கள். லாக்டவுன் முடிந்ததும் முறையான அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X