நடிகையின் அந்த முடிவுக்கு தாறுமாறாக வந்த அட்வைஸ்... அதிரடியாக திட்டத்தை மாற்றிய டாப் ஹீரோயின்

By

சென்னை: அறிவித்த தனது முடிவை, நடிகை மாற்றியதற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

தெலுங்கு ஹீரோவை திருமணம் செய்துள்ள அந்த தமிழ் நடிகை, தொடர்ந்து நடித்து வருகிறார் இரண்டு மொழிகளிலும்.

இவர், தமிழில் ஹிட்டான படம் ஒன்றின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார் இப்போது. இந்தப் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நடிகையின் ஆக்டிங்குக்கு நல்ல பெயர். ஏராளமான பாராட்டுகள்.

செட்டிலாக

செட்டிலாக

இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது, நடிகை பர்சனலாக, சில விஷயங்களை மனம் விட்டுப் பேசினாராம். அப்போது, போதும் இன்னும் ரெண்டு, மூனு வருஷத்துல சினிமாவை விட்டுட்டு, குடும்பம் குட்டின்னு செட்டிலாகலாம்னு இருக்கேன். அதனால, அடுத்தடுத்த படங்கள்ல நல்ல கதைகளை செலக்ட் பண்ணி நடிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன் என்றார்.

போன் கால்கள்

போன் கால்கள்

போதாதா, மொத்த மீடியாவும் இதை போகஸ் பண்ண, நடிகைக்கு ஏகப்பட்ட போன் கால்களாம், 'என்னங்க இப்படி சொல்லிட்டீங்க' என்று. நடிகையை நம்பி, சில விளம்பர நிறுவனங்கள் சில வருடங்களுக்கு மொத்தமாக கான்ட்ராக்ட் போட்டிருக்கிறதாம். அந்த நிறுவனங்கள் அலற, அடுத்து, நடிகைக்கு வேண்டிய சில சீனியர்கள் நடிகைகளும் அட்வைஸ் செய்தார்களாம் அவசரமாக.

போரடிச்சுரும்

போரடிச்சுரும்

'இப்பதான், நல்ல கேரக்டர்ல நடிக்கத் தொடங்கியிருக்கே, அதுக்குள்ள சினிமாவுல இருந்து ரிடையர்ட் ஆகிட்டேன்னா, வாழ்க்கை போரடிச்சுரும். இப்ப கிடைக்கிற வாய்ப்பு பிறகு கிடைக்காது. அதனால போகிற வரை நடி' என்று அட்வைஸ் செய்தார்களாம். கூடவே சில சினிமா மானேஜர்கள், ரிடையர்மென்ட் செய்தி பரவினால், 'இப்பவே ஒதுக்கி விடுவார்கள் என்று அட்வைஸ் செய்தார்களாம்.

அவசர விளக்கம்

அவசர விளக்கம்

இதையடுத்துதான் தனது முந்தைய செய்திக்கு நடிகை அவசரமாக விளக்கம் அளித்தாராம். அதாவது நான் அப்படி சொல்லவே இல்லை, நான் சொன்னதுக்கு 'ரிடையர்மென்ட்' அர்த்தம் இல்ல. சினிமாவில் ஹீரோயினா 10 வருடங்கள் தொடர்வது கஷ்டம்னுதான் சொன்னேன். சினிமாவுல நடிக்கலைன்னா, வேற ஏதாவது ஒரு விதத்துல இருப்பேன்னு விளக்கம் கொடுத்தாராம். டோலிவுட்டில் இதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் இப்போது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X