twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தோழி கேரக்டரில் இருந்து அவர் விலக, இதுதான் காரணமாம்... எல்லா நடிகைகளுக்கும் அந்த ஆசை இருக்கே ஏன்?

    By
    |

    சென்னை: அந்தப் படத்தில் இருந்து நடிகை திடீரென்று விலக அந்த ஆசைதான் காரணம் என்கிறார்கள்.

    அந்த பெண் லீடரின் வாழ்க்கை கதை சினிமாவாகி வருகிறது. இதில் மூன்று முறை தேசிய விருதை வாங்கிய இந்தி நடிகை மெயின் கேரக்டரில் நடித்துவருகிறார்.

    முன்னாள் ஹீரோவாகவும் முதல்வராகவும் அந்த ஹீரோ நடித்து வருகிறார். அவர் லுக்குக்கு அத்தனை வரவேற்பு.

    டூயட்தான் பாடுவேன்.. அப்படியெல்லாம் நடிக்க முடியாது.. டாப் ஹீரோவுக்காக அடம்பிடிக்கும் நம்பர் நடிகை!டூயட்தான் பாடுவேன்.. அப்படியெல்லாம் நடிக்க முடியாது.. டாப் ஹீரோவுக்காக அடம்பிடிக்கும் நம்பர் நடிகை!

    விளாசித் தள்ளிய

    விளாசித் தள்ளிய

    இந்நிலையில் டைட்டில் ரோலில் நடிக்கும் நடிகையின் இரண்டாவது லுக்கை இன்று வெளியிட்டுள்ளனர். பர்ஸ்ட் லுக்கை பார்த்து விளாசித் தள்ளிய ரசிகர்கள், அந்த நடிகையை கடுமையாக விமர்சித்தார்கள். ரெண்டாவது லுக்கில் நன்றாக இருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள். அந்த போட்டோ வைரலாகி வருகிறது.

    லீடரின் தோழி

    லீடரின் தோழி

    இதற்கிடையே இந்தப் படத்தில், லீடரின் தோழியாக நடிக்க இருந்தார், முத்தழகு. அவரது லுக்கும் நடிப்பும் அந்த கேரக்டருக்கு அப்படியே பொருந்தும் என்று பேசிக் கொண்டார்கள் ரசிகர்கள். ஆனால், இப்போது அவர் நடிக்கவில்லை. கடைசிக் கட்டத்தில் அவர் இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். இதனால் தமிழில் சில படங்களில் நடித்த மலையாள நடிகை நடிக்கிறார்.

    ஒப்பந்தமான நேரம்

    ஒப்பந்தமான நேரம்

    திருமணத்துக்குப் பிறகு முத்தழகுவுக்கு அதிக வாய்ப்பில்லை. ஒன்றிரண்டு படங்களில்தான் நடித்து வந்தார். இந்நிலையில்தான் இந்தப் படத்துக்கு அவரை பேசினர். நடிப்பதாகச் சொன்னார் அவர். இதில் ஒப்பந்தமான நேரமோ, என்னமோ, தெலுங்கில் சில வாய்ப்புகள் கதவைத் தட்டியது அவருக்கு. மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார்.

    கீர்த்தி நடிகை

    கீர்த்தி நடிகை

    இந்நிலையில்தான் அந்த இந்தி படத்தில் இருந்து கீர்த்தி கொண்ட நடிகையை நீக்கினார்கள். அவர்களுக்கு ஒரு தென்னிந்திய நடிகைதான் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டுமாம். படத்தை இங்கேயும் மார்க்கெட் செய்ய உதவும் என்பதால் இந்த முடிவு. இந்த நிலையில் முத்தழகு ஞாபகத்துக்கு வர, அவரிடம் பேசியிருக்கிறார்கள். உடனே ஓகே சொல்லிவிட்டார்.

    இந்தி மேல் ஒரு கண்

    இந்தி மேல் ஒரு கண்

    காரணம், இந்தியில் நடிக்க வேண்டும் என்கிற பேராசை. இவருக்கு மட்டுமல்ல, பெரும்பாலான நடிகைகளுக்கு இந்தி வாய்ப்பு மேல் ஒரு கண் இருக்கிறது. அதில் நடித்தால் வேற லெவல் பப்ளிசிட்டி என்பதும் சம்பளம் அதிகமாகத் தருவார்கள் என்பதும் இதற்கு காரணம். இதனால் இந்தி வாய்ப்பு கிடைத்தால் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள்.

    மெட்ராஸ் விரைவு வண்டி

    மெட்ராஸ் விரைவு வண்டி

    ஏற்கனவே 'பாலிவுட் பாட்ஷா'வின் இந்தி படமான, மெட்ராஸ் விரைவு வண்டி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார், முத்தழகு. இது முழு நீள இந்திப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு. இந்த நேரத்தில் பெண் லீடர் படத்தினர், முத்தழகுவிடம் கால்ஷீட் கேட்க, 'அப்ப இருந்தது, இப்ப இல்லை' என்று சொல்லி விட்டாராம் நடிகை.

    அடுத்த ரவுண்ட்

    அடுத்த ரவுண்ட்

    'எனக்கு இந்திதான் முக்கியம். இதுல நடிச்சா இன்னும் இரண்டு மூன்று வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்த ரவுண்ட்டை இந்தியில் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதனால கால்ஷீட் இல்லை என்று அன்பாக மறுத்துவிட்டார் என்கிறார்கள். பிறகுதான் அந்த பூரணமான மலையாள ஹீரோயினை தேடிப் பிடித்து ஒப்பந்தம் செய்தார்களாம். இவர் அந்த கேரக்டருக்கு சரிபட்டுவரா என்பது பற்றி ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

    English summary
    Why the National award winning actress has left from the female leader biopic?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X