»   »  சினிமாக்காரர்களுக்கு இது கருணை மருத்துவமா... கட்டாய மருத்துவமா!

சினிமாக்காரர்களுக்கு இது கருணை மருத்துவமா... கட்டாய மருத்துவமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சண்டே எல்லாரும் வீட்டுல ரெஸ்ட்ல இருக்குற மாதிரி ஜக்கம்மாவும் ரிலாக்ஸா இருப்பான்னு போன கோடங்கி கிட்ட வாக்கு சொல்லி அனுப்பாம மறுபடியும் ஒரு கேள்வியோட ஜக்கம்மா கதை சொல்ல...

அதை சொல்றேன் கேளுங்க...

ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்குற ஆஸ்பத்திரிக்கு இலவசமா சிகிச்சை செய்றேன்னு சொன்னாலும் பக்கத்துல இருக்கும் ஊர்ல பெருசா யாரும் வர்றதில்லை...

Why the private hospitals give free treatment to film industry?

வருஷத்துக்கு இவ்ளோ ஆபரேஷன், இவ்ளோ நோயாளிகளுக்கு சிகிச்சை, மருந்து மாத்திரை எல்லாமே இலவசமா குடுத்தா தான் கோடிகளைக் கொட்டும் மெடிக்கல் காலேஜ் நடத்த முடியும்னு சொல்லிட்டாங்க.

இலவச ஆஸ்பத்திரிக்கு ஆள் புடிக்க ஒரு கூட்டம் கிராமம் கிராமமா வேன் எடுத்துகிட்டு போய் ஆள் புடிக்கிறாங்க.

இன்னொரு பக்கம் அவங்களே இலவச சலுகை தர்றேன்னு சொல்லி விழா நடத்தி சினிமாக்காரங்களுக்கு அடையாள அட்டை குடுத்துகிட்டு இருக்காங்க. இந்த அட்டையை வாங்குன சினிமாக்காரங்களால அவ்ளோ தூரம் போய் சிகிச்சை பெறவும் முடியல.

இப்படி 'இலவச சிகிச்சை' சலுகை குடுக்குறவங்களைத்தான் தாராள தண்டி... கலியுக கர்ணன்... கல்வித் தந்தை... மன்னர் அப்படி... இப்படின்னு புகழ்ந்து தள்ளுது ஒரு கூட்டம்.

இலவச சேவை செய்யாம போனா அவங்க கல்லா கட்ட முடியாதுன்னு தெரிஞ்சும் அவங்க செய்யுறது சுய நலமில்லை சேவைன்னு சொல்ல சினிமா சங்கங்கள்ல ஒரு கூட்டத்தையும் ஏற்படுத்தியிருக்காங்க.

பெரும்பாலான தனியார் மருத்துவ கல்லூரிகள் அளிக்கும் இலவச மருத்துவ சிகிச்சை என்பது.

சேவையா...?
சுய நலமா..?
கருணையா..?
கட்டாயமா..?

இந்த இலவச சேவையை உறுப்பினர்களுக்கு விழா நடத்தி வாங்கி கொடுக்கும் சினிமா சங்கங்கள்... உறுப்பினர்களை ஏமாற்றுகிறதா...? ஏமாறுகிறதா..?

இந்த கதையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லு, வாக்கு சொல்றேன்னு சொல்லிட்டு ஜக்கம்மா கிளம்பிட்டா.

ஜர்க் ஆன நா உங்க கிட்ட வ ந்துட்டேன்... பதில சொல்லுங்க!

- கோலிவுட் கோடங்கி

English summary
Why some of the private hospital in Chennai outskirts offer free treatment to film industry people? Here is the background story.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil