அந்த இயக்குனரை டாப் ஹீரோ அதிரடியா ரிஜெக்ட் பண்ண, இதுதான் காரணம்னு சொல்றாங்களே... நெசமாவா?

By

சென்னை: டாப் ஹீரோ, அந்த இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்ததற்கு இதுதான் காரணம் என்று பேச்சு அடிபடுகிறது, கோலிவுட்டில்.

டாப் ஹீரோ இப்போது நடித்து வரும் படத்தின் ஷூட்டிங், இந்த மாத இறுதியில் முடிவடைகிறது.

ஏப்ரலில் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தனது அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது பற்றி டாப் ஹீரோ இன்னும் சொல்லவில்லை.

4 இயக்குனர்கள்

4 இயக்குனர்கள்

இந்நிலையில் நான்கு இயக்குனர்கள் அவரை இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், எல்லோரிடமும் கதைகளை கேட்ட டாப் ஹீரோ, 'பாலிவுட் பாட்ஷா' மாதிரி ஒன்றும் சொல்லாமல் அமைதிக் காக்கிறார். 'பாலிவுட் பாட்ஷா' தனது அடுத்த படத்தை ஒரு வருடமாக அறிவிக்காமல் இருப்பது தெரிந்த விஷயம்தான்.

திருப்தி இல்லை

திருப்தி இல்லை

அவரும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டும் திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. அதே ஸ்டைலில்தான் நம்ம டாப் ஹிரோவும் இருக்கிறார். கேட்டக் கதைகள் எல்லாம் வித்தியாசமாக இருக்க, அவருக்கு ஏற்ற வகையில் இல்லையாம். இதில் மகிழ்ச்சியான இயக்குனர் படத்தில் அவர் நடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

ஸ்டைலிஷான கதை

ஸ்டைலிஷான கதை

இதற்கிடையே, அந்த விமானப் படத்தை இயக்கியுள்ள இயக்குனர், டாப் ஹீரோவிடம் 20 நிமிடம்தான் கதை சொன்னாராம். செம ஸ்டைலிஷான கதையாம். ஆனால், இது எனக்குச் சரிபட்டு வராது என்று டாப் ஹீரோ சொல்லாமல் சொல்லி விட்டதாகச் சொல்கிறார்கள். அவர் மறுத்திருப்பதற்கு வேறொரு காரணம் சொல்லப்படுகிறது. அதாவது அந்த இயக்குனர் சில விஷயங்களில் அதிகம் அடம்பிடிப்பாராம்.

ஆலோசனை சொன்னால்

ஆலோசனை சொன்னால்

இப்படித்தான் இருக்கவேண்டும், அப்படித்தான் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பாராம். கதையில், வசனத்தில், நடிப்பில், சின்ன ஆலோசனை சொன்னால் கூட ஏற்க மாட்டாராம். என் வேலையில யாரும் தடையிடக் கூடாது, நான் நினைச்சபடிதான் இருக்கும் என்று வெடுக்கென சொல்லிவிடுவாராம். இந்த தகவல் டாப் ஹீரோவுக்கு போனதால்தான் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X