லைக் போட்டது குத்தமாய்யா? இயக்குனரை தூக்கிய ஒல்லி ஹீரோ... இதுக்கு பின்னால இப்படியொரு கதையா?
சென்னை: லைக் போட்டதன் காரணமாக, அந்த ஒல்லி ஹீரோ, பிரபல இயக்குனரை தனது படத்தில் இருந்து தூக்கி இருப்பதாகக் கூறுகிறது கோலிவுட்.
அந்த ஒல்லி ஹீரோவின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி இருந்தது சமீபத்தில். டி- சிக்ஸ்டீன் படத்தின் இயக்குனர் அதை இயக்குவதாக, அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அந்த டிசைனே அசத்தலாக இருந்ததால் இன்டஸ்ட்ரியில் கவனிக்கப்பட்டது. ஆனால் வேறு ஒரு இயக்குனரின் இயக்கத்தில்தான் அந்த ஒல்லி ஹீரோ நடிக்க இருந்தாராம்.

ராட்சசத்தன ஹிட்
பிறகு ஏன் இந்த இயக்குனர் மாற்றம் என்று விசாரித்தால், கதையாகச் சொல்கிறார்கள் கோலிவுட்டில். அதாவது தலைக்கு மேலே கட்டுவோமே, அதன்பெயரில் பட்டியை சேர்த்து காமெடி படம் இயக்கியவர் அந்த இயக்குனர். அடுத்து அவர் இயக்கிய அந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமும் ராட்சசத்தனமாக ஹிட்டானது.

டிக் பண்ணியிருந்தார்
இதையடுத்துதான் ஒல்லி ஹீரோவுக்கு கதை சொன்னார், அந்த இயக்குனர். அவருக்குப் பிடித்திருந்தது. வரிசையாக அடுத்தடுத்தப் படங்களில் நடித்துவரும் ஹீரோ, அடுத்து இவர் இயக்கத்தில் நடிக்கத்தான், டிக் பண்ணியிருந்தார். இந்தப் படத்தை, தீபாவளிக்கு கொளுத்து வோமே, அதன் பெயரில் உருவாகி சமீபத்தில் ரிலீஸ் ஆன படத்தைத் தயாரித்த நிறுவனம் தயாரிக்க இருந்தது.

உச்ச நடிகர் பேச்சு
இந்நிலையில் இயக்குனருக்கு, லைக் வழியில் வந்து சேர்ந்திருக்கிறதாம் சிக்கல். அதாவது உச்ச நடிகர் சமீபத்தில் விழா ஒன்றில் பேசியிருந்தார். அதில் அவர் பேசியது சர்ச்சையானது. இதையடுத்து அவருக்கு எதிராக, சமூக வலைத்தளங்களில் சரமாரியாக விமர்சனங்கள் எழுந்தன. கடுமையாக விமர்சிக்கப்பட்டார் உச்ச நடிகர்.

ராட்சச இயக்குனர்
அவருக்கு எதிராக வந்த பல பதிவுகளுக்கு, இந்த ராட்சச இயக்குனர் கண்டபடி லைக்குகளை தட்டிவிட்டாராம் ஆக்ரோஷமாக. இதை யாரோ கவனித்து ஒல்லி ஹீரோவிடம் ஊதிவிட, தனது அங்கிளை எதிர்க்கும் இயக்குனருடன் படம் பண்ணுவதா என்று அவரை நீக்கிவிட்டு சிக்ஸ்டீன் இயக்குனரை சத்தம் போடாமல் ஒப்பந்தம் செய்துவிட்டாராம். கோலிவுட்டில் இதுதான் டாக்காக இருக்கிறது இப்போது.


Click it and Unblock the Notifications











