அவர் படத்தில் வில்லனா..தெறித்து ஓடும் நடிகர்கள்..டிவி நடிகர் பாலிவுட்டில் நடிகரை தேட காரணம் அதானாம்!
சென்னை: டிவி நடிகர் தனது படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க முயற்சி செய்வதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் அந்த நடிகர். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. நடிகரின் கேரியரில் வந்த படங்களிலேயே சிறப்பான படம் இந்தப் படம்தான் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது நடிகரின் பர்ஃபாமன்ஸ்.

வசூலை குவித்த படம்
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அந்தப் படம் வசூலையும் குவித்தது. அந்தப் படத்தில் நடித்த ஹீரோயின், நகைச்சுவை நடிகர்கள், வில்லன் நடிகர்கள் என அனைவரும் பாராட்டை பெற்றனர். குறிப்பாக வில்லன் நடிகராக நடித்திருந்த பிரபல நடிகர் சிறப்பாக நடித்திருந்தார்.

அதே ஃபார்முலா..
இதனை தொடர்ந்து நடிகர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் நடிகர் தற்போது நடித்து வரும் ஒரு படத்தில், சமீபத்தில் ரிலீஸ் ஆகி ஹிட்டான படத்தில் ஃபாலோ செய்த பார்முலாவை இந்த படத்திலும் அப்ளை செய்யலாம் என முடிவு செய்துள்ளாராம்.

அக்கட தேசத்து நடிகர்கள்
அதற்காக அந்தப் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்ததை போன்றே ஸ்மார்ட்டான சில ஹீரோக்களை அப்ரோச் செய்தார்களாம். அக்கட தேசத்தை சேர்ந்த அந்த இரண்டு ஹீரோக்களும் தமிழில் ஹீரோவாக பரிட்சயமானவர்கள்தான். ஆனால் டிவி நடிகருக்கு வில்லன் என்பதை கேட்ட அந்த நடிகர்கள், டக்கென நோ சொல்லி விட்டார்களாம்.

வட நாட்டில் வலை வீசுகிறார்களாம்
நாங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டாமா? நாங்களும் நடித்தால் ஹீரோதான் என கூறி விட்டு தெறித்து ஓடிவிட்டார்களாம் அந்த நடிகர்கள். இதனை எதிர்பார்க்காத டிவி நடிகரும் அவரது டீம்மும், வண்டியை வட நாட்டு பக்கம் திருப்பியிருக்கார்களாம். பாலிவுட்டில் இருந்து ஒரு ஸ்மார்ட் லுக் ஹீரோவை பிடித்து போட்டு விடுவோம் என வலை வீசி வருகிறார்களாம்.

படக்குழு அப்செட்டாம்..
மார்க்கெட்டை இழந்த பல ஹீரோக்கள் வில்லனாகதான் ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் விட்டதை பிடித்துள்ளார்கள். டாப்பில் உள்ள பல நடிகர்கள் வில்லன் கதாப்பாத்திரம் என்றாலும் ஓகேதான் என நடித்து வருகின்றனர். ஆனால் ஹீரோவுக்கு நிகரான கதாப்பாத்திரம் என்று கூறியும் அந்த ஹீரோக்கள் நோ சொன்னது படக்குழுவை கொஞ்சம் அப்செட் ஆக்கியுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











