ஆணியே புடுங்க வேணாம்.. கணவரை கடுப்படித்த பிரபல நடிகை.. பல கோடி நஷ்டமாம்.. பாவம்!

By Staff

சென்னை: சினிமாவில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்றாலும், பாவப்பட்ட முகத்தை வைத்துக் கொண்டு பிரேக்கப் ஃபீலிங்கில் இருந்த பிரபல நடிகையை உஷார் செய்து கல்யாணமும் செய்துவிட்டாராம் அந்த டைரக்டர்.

ஆனால், திருமணத்துக்குப் பிறகு நடிகைக்கு சரியான ஏழரை ஸ்டார்ட் ஆகிவிட்டதாக கூறுகின்றனர். கணவர் படங்களும் சொதப்ப, தான் நடிக்கும் படங்களும் ஓடாமல் போக கோலிவுட்டில் இருந்தே நடிகையை ஒதுக்கிவிட்டார்களாம்.

Wife Actress upset over Husband recent movie result
Photo Credit:

ஆனாலும், கணவன் போல இல்லாமல், நடிகை தனக்கு இருக்கும் திறமை காரணமாக மற்ற மொழிகளில் டாப் நடிகர்களுடன் நடித்து நன்றாகவே சம்பாதித்து வருகிறார். ஆனால், மனைவியின் காசை எப்படியெல்லாம் கரியாக்க வேண்டும் என கணவர் திட்டமிட்டு ஏகப்பட்ட சொதப்பல்களை தொடர்ந்து செய்து வரும் நிலையில், கடைசி சொதப்பலை பார்த்து கடுப்பான நடிகை கழுவி ஊற்றி விட்டார் என்கின்றனர்.

பல கோடி போச்சு: கணவருக்கு பெரிதாக படம் எடுக்க வரவில்லை என்பதை நடிகையே பலமுறை சொல்லி அவரை வீட்டில் இருந்து தனக்கு ஹெல்ப் செய்யும்படி உத்தரவிட்டாலும், எப்படியாவது நானும் என் திறமையை நிரூபித்துக் காட்டி இந்தியாவிலேயே பெரிய இயக்குநராக மாறுவேன் என ஏகப்பட்ட பில்டப் வடைகளை சுற்றி மனைவியை மயக்கி பல கோடி பட்ஜெட்டில் படமெடுத்துள்ளார்.

அடிமேல் அடி: ஆனால், இது எதுவும் தேறாது என்பதாலே அந்த படத்துக்கு அடுத்தடுத்து பொருளாதார நெருக்கடி வந்த நிலையில், மனைவியும் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்து அந்த பணத்தை எல்லாம் கணவருக்காக செலவு செய்தால், நடுவில் அந்த பிரபல நடிகரின் பஞ்சாயத்து கணவர் படத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்தி மிகப்பெரிய அடியை கொடுத்துவிட்டதாக கூறுகின்றனர்.

ஆணியே புடுங்க வேண்டாம்: கணவர் மீது நடிகை வைத்த ஒட்டுமொத்த நம்பிக்கையும் கணவரின் கடைசி படம் மொத்தமாக காலி செய்துவிட்டது என்றும் அதற்கு காரணம் அவரது அகல கால் தான் என்றும் படம் நல்லாவே இல்லை என பாதியிலேயே ஹீரோ சண்டை பிடித்த நிலையில், ஹீரோவுடன் சமாதானம் எல்லாம் செய்து படத்தை முடித்து தியேட்டரில் பார்த்த மனைவி கணவரை பார்த்து முறைத்து விட்டு வீட்டில் கதகளி ஆடிவிட்டார் என்கின்றனர். இந்த முறையும் கணவர் சொதப்பிய நிலையில், இதுவரை புடுங்கின ஆணியே போதும், இதுக்கு மேல பாடி தாங்கது சாமி என்றே சொல்லிவிட்டாராம். நல்லவேளை அந்த டாப் நடிகர் கிரேட் எஸ்கேப் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X