நண்பன் மகளுடன் கள்ளத்தொடர்பு: கதறும் நடிகரின் மனைவி
Recommended Video

சென்னை: திறமையான நடிகர் ஒருவர் நண்பனின் மகளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை பார்த்து அவரின் மனைவி கதறிக் கொண்டிருக்கிறாராம்.
திறமையின் மொத்த உருவமாக உள்ள நடிகர் அவர். நடனம் ஆடுவார், பாட்டு பாடுவார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். காதல் திருமணம் செய்த அவருக்கு 2 குழந்தைகள்.
நடிகர் பட வாய்ப்பு இல்லாமல் அல்லாடிய போது மனைவி தான் பெரும் ஆதரவாக இருந்தார்.

நடிகர்
நடிகர் பார்க்க அழகாக இருப்பார். அவரின் திறமை, சிவப்பு தோலை பார்த்து அவரிடம் பல நடிகைகள் மயங்கியுள்ளனர். முன்பெல்லாம் பப்ளிக்காக நடிகைகளை பிக்கப் செய்தவர் கெரியர் பாதிக்கப்படும் என்று ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணியதை அடுத்து அடக்கி வாசித்தார். தான் செய்யும் லீலைகளை நிறுத்தவில்லை, மாறாக யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து வருகிறார்.

வெற்றி
நடிகருக்கு அண்மை காலமாக படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடுவது இல்லை. அவர் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த அந்த பெரிய படம் கூட கை கொடுக்கவில்லை. நடிகரின் அர்ப்பணிப்பை பலரும் பாராட்டினார்கள். ஆனால் படம் சுமாராகத் தான் ஓடியது. அதன் பிறகும் அவரின் படங்கள் பெரிய அளவில் போகாமல் சுமாராகத் தான் செல்கிறது.

நடிகைகள்
நடிகருக்கு பட வாய்ப்புகளுக்கு ஒன்றும் குறைவு இல்லை. இருப்பினும் படங்கள் சரியாக போகாத சோகத்தில் இருக்கும் அவர் நடிகைகளுடன் ஊர் சுற்றி, ஜாலியாக இருந்து மனதை தேற்றிக் கொண்டிருக்கிறாராம். பிக்கப் டிராப் செய்து வரும் நடிகர் தற்போது ஒரு இளம் நடிகையை தன் பக்கம் ஈர்த்துள்ளாராம்.

கண்ணீர்
நடிகர் தற்போது பிடித்திருக்கும் நடிகையும் திறமையானவர். முன்னேற்ற பாதையில் உள்ள அவர் முன்னணி நடிகையாக வேண்டும் என்று துடிக்கும் நேரத்தில் நடிகரின் காதல் வலையில் விழுந்துள்ளார். இத்தனைக்கும் அந்த நடிகை நடிகரின் நண்பரின் மகள். வேண்டாம்யா, விட்டுடுயா என்று பலரும் அறிவுரை கூறியும் நடிகர் கேட்கவில்லையாம். இந்த கருமத்தை பார்த்து நடிகரின் மனைவி தான் கதறிக் கொண்டிருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











