கணவரை பதம் பார்க்க முயன்ற நடிகை?.. முதலமைச்சரிடம் பஞ்சாயத்தை கொண்டு சென்ற மனைவி?

By Staff

சென்னை: கணவரை தொடர்ந்து வேறு நடிகை பதம் பார்த்ததால் பஞ்சாயத்தை அப்போதைய முதலமைச்சரிடம் கொண்டு சென்றாராம் நடிகரின் மனைவி.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவரின் அக்காவும் ஒரு நடிகை. தங்கச்சி அளவுக்கு பிரபலம் இல்லையென்றாலும் தனக்கென தனி மார்க்கெட்டை பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் உருவாக்கி வைத்திருந்தார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ஒரு விவகாரமான சீனில் நடித்து அனைவரது மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டார்.

wife complained to the Chief Minister after her husband was in a relationship with another actress

அந்த நடிகருடன் தொடர்பு: முதல் படத்தில் நடித்தபோதே அந்த மாதிரியான சீனில் நடித்ததால் என்னவோ இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம். அந்த கெமிஸ்ட்ரி தீயில் இரண்டு பேருமே குளிர் காய்ந்தார்களாம். அந்த சமயத்தில் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணம் வேறு ஆகியிருந்திருக்கிறது.

கழுவுற மீனுல நழுவுற மீன்: ஆனால் அதையெல்லாம் கணக்கில் எடுக்காத நடிகை நடிகருடன் தொடர்பில் இருந்து ஏகத்துக்கும் சந்தோஷப்படுத்தினாராம்.ஒருகட்டத்தில் நடிகையை இரண்டாவது திருமணம் செய்ய நடிகர் விரும்ப கில்லாடியான நடிகை கழுவுற மீனில் நழுவுற மீனாக எஸ்கேப் ஆகியிருக்கிறார். பிற்காலத்தில் அந்த நடிகர் பிரபல நடிகையுடன் காதலில் விழுந்து பெரும் பஞ்சாயத்தானது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகை: முதல் படத்துக்கு பிறகு அம்மணிக்கு பெரும் வாய்ப்புகள் எல்லாம் அமைய தொடங்கின. அதன்படி உச்ச நடிகர் படத்தில் நடித்து தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார். உச்ச நடிகருடன் நடித்த பிறகு மேற்கொண்டு வாய்ப்புகள் எல்லாம் அமைய தொடங்கிவிட்டன. இதற்கிடையே வில்லனாக அறிமுகமாகி பிறகு வேறு இடத்துக்கு நகர்ந்த நடிகருடன் சில படங்களில் நடிக்க தொடங்கினார் அம்மணி.

பதம் பார்த்த நடிகை: தொடர்ந்து அந்த ஹீரோவுடன் நடித்தபோது முதல் படத்தின் ஹீரோவிடம் காட்டிய அத்தனை வேலைகளையும் இவரிடமும் காட்டி பதம் பார்த்தாராம் நடிகை. ஆனால் இந்த நடிகருக்கோ சினிமாவில் பாரம்பரியமாக இருக்கும் குடும்பத்தில் ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துவிட்டார். ஆரம்பத்தில் நடிகையுடன் இருந்த தொடர்பு மனைவிக்கு தெரியவில்லையாம்.

கண்டுபிடித்த நடிகை: எப்படியும் மூடி மறைத்த உறவு ஒருநாள் வெளியில் வந்துதானே ஆகும். அந்தவகையில் நடிகைக்கும், நடிகருக்குமான ரகசிய உறவு மனைவிக்கு தெரியவந்திருக்கிறது. இதில் நடிகரின் மனைவியும் ஒரு நடிகை என்பதும்; அவரும் ஏற்கனவே இரண்டு காதல் தோல்விகளை பார்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் மனைவிக்கு தெரியவர கணவரிடம் எவ்வளவோ சொல்லி பார்த்தாராம்.

முதலமைச்சரிடம் பஞ்சாயத்து: ஆனாலும் அந்த நடிகையிடம் மகுடி ஊதிய நாகப்பாம்பாக அடங்கியே இருந்திருக்கிறார் நடிகர். இதனால் வேறு வழி என்னவென்று யோசித்த மனைவி அப்போது முதலமைச்சராக இருந்தவரிடம் நேராக சென்று; என் கணவர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார். ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னாராம்.

பிறகு நடிகரை அழைத்த முதலமைச்சர் எப்பேர்பட்ட குடும்பத்தில் பெண்ணை எடுத்துவிட்டு வேறு யாருடனோ ஏன் சுற்ற வேண்டும். அரசியலிலும், சினிமாவிலும் பெரிய ரவுண்டு வர வேண்டுமென்றால் அந்த நடிகையுடனான தொடர்பை அறுத்து எறிந்துவிடு இல்லையென்றால் வேறு மாதிரிதான் இதை டீல் செய்ய முடியும் என கடுப்பான தொனியில் பேசினாராம்.

விலகிய நடிகர்: அதனையடுத்து பயந்துபோன நடிகர் இனியும் அந்த நடிகை நம்மை பதம் பார்த்தால் நாம் சுவடே இல்லாமல் போய்விடுவோமோ என்று அஞ்சி விலகிவிட்டாராம். அதோடு அடங்காத நடிகை வெளிமாநிலத்திலும் ஒரு விளையாட்டு வீரருடன் தொடர்பில் இருந்தாராம். அவரும் ஏற்கனவே திருமணம் ஆனவராம். இப்படி திருமணம் ஆனவர்களுடன் மட்டுமே தொடர்ந்து உறவில் இருந்த நடிகை இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அதற்கெல்லாம் அவர் அப்படி செய்து சம்பாதித்த பாவம்தான் காரணம் என கிசுகிசுக்கின்றனர் சினிமாத்துறையினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X