சொந்த காசை போட்டு சூனியம் ஆனது போதும்.. அடுத்தவன் காசுல நடி.. விசாலமான நடிகரை விளாசிய மனைவி?
சென்னை: விசாலமான நடிகர் தன்னை வைத்து படமெடுத்து தயாரிப்பாளர்கள் பல கோடிகளை அள்ளிக் குவிக்கின்றனர் என்றும் ஆனால், தனக்கு சம்பளமாக கிள்ளி மட்டுமே கொடுக்கின்றனர் என சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தற்போது சூடு கண்ட பூனை போல மாறிவிட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
உச்ச நடிகரே உஷாராக சினிமாவில் நம்பி பணத்தை போட்டால் சில்லறை தேறாது என இத்தனை ஆண்டுகளாக அமைதியோ அமைதி என இருந்து வரும் நிலையில், நேற்று வந்த இளம் நடிகர்கள் எல்லாம் ஓடிடி வருகையால் பெத்த லாபத்தை தாங்களே வாரி சுருட்டி வைத்துக் கொள்ளலாம் என வான்டட்டாக வண்டியில் ஏறி தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளி போட்டுக் கொண்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில், விசாலமான நடிகர் தொடர்ந்து தோல்விப் படங்களை சொந்த தயாரிப்பில் கொடுத்து வருவதை பார்த்த அவரது மனைவி இனிமே மூடிக்கொண்டு அடுத்தவன் காசுல படம் நடி என்கிற ஆர்டரை போட்டுவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
பேராசை பெருநஷ்டம்: தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் தன்னை வைத்து லாபம் பார்க்கின்றனர். ஆனால், தனக்கு சில கோடிகளில் மட்டுமே சம்பளம் கொடுக்கின்றனர். தனக்கு பிறகு வந்த இளம் நடிகர்கள் எல்லாம் 10 கோடி, 20 கோடி என சம்பளத்தை உயர்த்தி விட்டார்கள் என பொறாமைப்பட்ட அந்த விசாலமான நடிகர் உடனடியாக சொந்த கம்பெனியை ஆரம்பித்து படம் நடித்து 50 கோடி, 100 கோடி என சம்பாதிக்கிறேன் பாருங்கடா என சவால் விட்டார். ஆனால், அவர் தயாரிப்பாளராக மாறி படம் எடுத்த பின்னர், அவருக்கு 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது தான் மிச்சம் என்கின்றனர்.

தலையில் தட்டிய மனைவி: தொடர்ந்து விட்ட காசை பிடிக்கிறேன் என புதிய படங்களை எடுத்து வரிசையாக ஃபிளாப் கொடுத்து தனக்கு இருந்த மார்க்கெட்டையும் டோட்டலாக காலி செய்த நிலையில், நடிகரின் மனைவி இதுக்கு மேல சொத்தை வித்து சொந்த காசுல சூனியம் வச்சுக்காத, கொஞ்சமாக சம்பளம் கொடுத்தாலும், அடுத்த தயாரிப்பாளர்கள் படங்களில் நடிச்சு போண்டியாக்கு என்றே சொல்லிவிட்டாராம்.
கம்பெனியை இழுத்த மூடப்போறாரா?: மனைவியின் பேச்சைக் கேட்டு உண்மை நிலையை உணர்ந்துக் கொண்ட நடிகர் கூடிய சீக்கிரத்திலேயே தனது கம்பெனியை இழுத்து மூடிவிட்டு மற்ற தயாரிப்பாளர்கள் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். மேலும், திறமையான இயக்குநர்களை தேடிப் பிடித்து தனக்காக படம் பண்ண சொல்லியும் கெஞ்சி வருகிறார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











